- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்க கூடாது; தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கிடுக்கிப்பிடி...

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்க கூடாது; தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு – மறு உத்தரவு வரும்வரை காத்திருப்பார்களா?

- Advertisement -

தமிழ் சினிமா துறையில் பெரிய நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே தொடர்ந்து வெளியாகின்றன. பல நூறு கோடி ரூபாய் வசூலிக்கின்றன. ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள் என்பது தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது மட்டும் இன்றி சினிமா துறையில் பல்வேறு பிரச்சனைகள் நீடிக்கின்றன.

குறிப்பாக நடிகர்களின் சங்கம் சம்பளம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கம் சில முக்கிய விஷயங்களை தீர்மானங்களாக நிறைவேற்றியது. அதன்படி வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களை துவங்குவதில்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனால் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு எதுவும் துவங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச்சுமை ஏற்படுகிறது.

இதனால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய படங்களை துவங்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டி உள்ளது.

இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர் சங்கத்தின் மறுஅறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழில் சிறப்புறச் செய்யும். ஒற்றுமையை வலியுமையோடு நிலைநாட்டுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்