- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்காவில் இருந்து பஞ்சாயத்து பேசவரும் நடிகர் கமல்ஹாசன் - அப்போ கேம் சேஞ்சர் படம் ரிலீஸ்...

அமெரிக்காவில் இருந்து பஞ்சாயத்து பேசவரும் நடிகர் கமல்ஹாசன் – அப்போ கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதா?

- Advertisement -

நடிகர் ராம் சரண் கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த படம் கேம் சேஞ்சர். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். வருகிற 10ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமான இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என, லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சினிமா பெடரேஷனில் புகார் அளித்துள்ளது.

- Advertisement -

அதாவது இந்தியன் 2 படத்தை தயாரித்தது லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான். இந்த படம் பிளாப் ஆனதால் லைகா நிறுவனத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியன் 3 படத்தை முடிக்க இயக்குனர் ஷங்கர் ரூ. 80 கோடி, தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் கேட்டிருக்கிறார். இதில் இயக்குனர் ஷங்கர் சம்பளமும் ரூ. 30 கோடி அடங்கும்.

ஏற்கனவே நீங்கள் இயக்கிய இந்தியன் 2 படத்தால் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இப்போது இந்தியன் 3 படத்துக்காக உங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுங்கள். படத்தின் தயாரிப்பு செலவை மட்டும் தருகிறோம். அத்துடன் இதுவரை இந்தியன் 3 எடுக்கப்பட்ட காட்சிகளை எங்களுக்கு போட்டுக் காட்டுங்கள் என லைகா நிறுவனம் கேட்டுள்ளது.

- Advertisement -

என் சம்பளத்தையும் விட்டுத் தர முடியாது. இந்தியன் 3 படத்தையும் போட்டுக்காட்ட முடியாது, அப்படி ஒரு வழக்கமே என்னிடம் கிடையாது என மறுத்திருக்கிறார் ஷங்கர். இதனால், இந்தியன் 3 படத்தை எடுத்து முடிக்காமல் அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக் கூடாது என்றுதான் லைகா நிறுவனம் பெடரேஷனில் புகார் அளித்துள்ளது.

இந்த பிரச்னை காரணமாக, கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இன்னும் 3 நாட்களே படம் ரிலீஸாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் ரிலீஸ் செய்ய ரூ. 25 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவுடன் அவரது தலைமையில் இந்தியன் 3 படம் குறித்து பேசி முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு லைகா நிறுவனமும் ஓகே சொல்லியதால், கேம் சேஞ்சர் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்