தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு அவருக்கான ஒரு இடத்தை நகைச்சுவையில் உருவாக்கினார் என்றால் அது மிகையல்ல. அவரது அந்த இடத்தை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு மிகச் சிறந்த கலைஞனாக அவர் அதில் இருக்கிறார். அவருக்கு பிறகும் அந்த இடத்துக்கு இதுவரை யாரும் வரமுடியவில்லை.
ஒரு திரைக்கலைஞனாக பலத்த பாராட்டை பெற்ற வடிவேலு, ஒரு தனிமனிதராக பலவிதமான விமர்சனங்களுக்கு, சர்ச்சைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார். அதுவும் அவருடன் பல ஆண்டு காலம் சினிமாவில் ஒன்றாக பயணித்தவர்களே சொல்லும்போது அதை மறுக்கவும் யோசிக்கதான் வேண்டியிருக்கிறது.
ஆனால் வடிவேலுவுக்கு என்று சில குணங்கள் உண்டு. அதாவது நடிகர் அஜீத்குமாரை வாடா, போடா என ஒருமையில் பேசி அவமதித்ததால்தான் வடிவேலுவை கடந்த 23 ஆண்டுகளாக அவர் தன் படங்களில் நடிக்க அனுமதிப்பது இல்லை. ராஜா என்ற படத்தில் நடித்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அதே போல் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த நடிகர் சிங்கமுத்து, கோர்ட்டில் அவர் மீது வழக்கு போடும் அளவுக்கு சென்றார். போண்டாமணி, பாவா லட்சுமணன் போன்றவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்த போது அவர்களுக்கு உதவவும், வடிவேலு முன்வரவில்லை என்பதெல்லாம் உண்மையான குற்றச்சாட்டுகளாக தான் இருக்கின்றன.
இந்நிலையில் அவருடன் சில படங்களில் நடித்த கஞ்சா கருப்பு சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் வடிவேலு குறித்து பேசி இருக்கிறார். அவர் அதில் கூறியதாவது, வடிவேலு யார் வீட்டுக்குச் சென்றாலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவர்களிடம், வண்டிக்கு பெட்ரோல் போடணும், 1500 ரூபாய் பணம் கொடுங்க என்று வாங்கி விடுவார். யாரிடமும் அப்படி பணம் கேட்க அவர் தயங்கவே மாட்டார்.
ஆனால், நான் எல்லாம் மற்றவர்களுக்கு பணம் கொடுத்துதான் பழக்கம். யார் உதவி கேட்டாலும் செய்வேன். யாரிடமும் எதற்காகவும் நான் இப்படி பணம் கேட்டதே கிடையாது. ஆனால் வடிவேல் அப்படி பணம் கேட்டு கேட்டு வாங்கியதால்தான் இப்போதும் படங்களில் நடிக்காத போதும் நன்றாக வசதியாக இருக்கிறார். நான் இப்படி கஷ்டப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு.





