- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் - போட்றா...

குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – போட்றா வெடிய என குதூகலித்த ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பதிலடி தரும் விதமாக அடுத்து வரும் அஜீத்குமாரின் குட் பேட் அக்லி படம் இருக்கும் என்று ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் அஜீத்குமார் திரிஷா பிரசன்னா சுனில் அர்ஜூன் தாஸ் யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி உள்பட 5 காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால் முன்னதாக 9ம் தேதி முக்கிய நகரங்களில் பெய்டு பிரிமியர் ஷோ நடத்துவது குறித்த ஏற்பாடு சில முக்கிய காரணங்களால் அப்படியே கைவிடப்பட்டுவிட்டது.

- Advertisement -

வருகிற ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினமான அன்று குட் பேட் அக்லி படம் ரிலீஸாவதால், அரசு விடுமுறை தினத்தில் வெளியாகும் படங்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு சிறப்பு காட்சி திரையிட அனுமதி உள்ளது. அதனால் அனுமதி எதுவும் கேட்காமல் அன்று காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே அஜீத்குமார் நடிப்பில் வெளியான வேதாளம் விஸ்வாசம் வீரம் உள்ளிட்ட வெற்றிப் படங்கள் 10ம் தேதி ரிலீஸாகி பெரிய வெற்றியை பெற்றதால், அந்த சென்டிமென்ட் படி இந்த படமும் 10ம் தேதி வெளியாவதால் நிச்சயம் மாஸ் ஹிட் படமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த வாரத்தில் குட் பேட் அக்லி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதே போல் சில தினங்களுக்கு முன் குட் பேட் அக்லி படத்தில் இருந்து ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பல புதிய தகவல்களை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் செகன்ட் சிங்கிள் குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தில் இந்த பாடல் வெளியாகிறது. நடிகர் அஜீத்குமார் ஜெயிலுக்குள் பாடி ஆடும் இந்த மாஸ் பாடலை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஓஜி சம்பவம் போல இந்த பாடலும் பட்டைய கௌப்பும் என்றும் கூறப்படுவதால் ஏகே ரசிகர்கள் ஏகப்பட்ட குதூகலத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்