- Advertisement -
சென்னையை அடுத்த போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் வகையில் நடந்த பிரம்மாண்ட முடி தானம் முகாமை திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். லேடீஸ் சர்க்கிள் இந்தியா நடத்திய இந்த உயரிய நோக்கம் கொண்ட முகாமில் 800க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தங்களது தலைமுடியை தானமாக வழங்கினார்கள். கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுபோன்ற உதவிகளை செய்ய அனைவரும் தாராளமாக முன்வர வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.





