தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி அரண்மனை ரோமியோ ஜூலியட் மான் கராத்தே வாலு தில்லாலங்கடி வேலாயுதம் மாப்பிள்ளை எங்கேயும் காதல் புலி என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நிறைய படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி, திடீரென சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவரை ஏற்கனவே ஹன்சிகா காதலித்த நிலையில் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.
வாலு படத்தில் நடித்த போது நடிகர் சிம்புவுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது வழக்கமான கிசுகிசுவாக போய்விட்டது. இதையடுத்துதான் நடிகை ஹன்சிகா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்த சோஹைல் கத்தூரியாவுக்கு 2வது மனைவியாக, திடீரென திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த சூழலில் தனது கணவர் சோஹைல் கத்தூரியாவை திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மோத்வானி பிரிந்து விட்டதாகவும் அவர்கள் இருவரும் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர் என்றும் சமீபமாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கத்தூரியா சமீபத்தில் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் தனது கணவர் சோஹைல் கத்தூரியாவுடன் இருந்த திருமண புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது வலைதள பக்கங்களில் இருந்து நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நீக்கி இருக்கிறார். மேலும் தனது கணவரை அன் பாலோவும் செய்துள்ளார்.
இதனால் அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அது இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. அது மட்டும் இன்றி விரைவில் விவாகரத்து கோரி நடிகை ஹன்சிகா மோத்வானி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாகவும் பாலிவுட் ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





