- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தை விஜயுடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்த பிரபல இயக்குனர்... அப்போ அவர்தான் அடுத்த...

இந்தியன் 2 படத்தை விஜயுடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்த பிரபல இயக்குனர்… அப்போ அவர்தான் அடுத்த படத்தை எடுக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது போலையே…

- Advertisement -

நடிகர் விஜய் கோட் படத்தின் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் சூழலில் அதற்கான வேலைகள் விறுவிறுபடைந்துள்ளன.

 

வெங்கட் பிரபு இயக்கும் இந்தத் திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அது தந்தை மகன் ரோல் எனக் கூறப்படுகிறது. இதில் ஒரு விதியை இளமையாக காட்டுவதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை உபயோகித்துள்ளனர். இதற்காக அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு அதற்கான பணிகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

 

படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல், வைபவ், விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதிலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டன. அடுத்த மாதம் படத்தில் இருந்து மூன்றாவது பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

இந்தப் பாடலுக்காக திரிஷா கேமியோ ரோலிங் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்குறி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது. கடைசி படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் கூறியிருக்கிறார்.

 

இதனால் விஜயின் 69 வது திரைப்படம் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை, எச் வினோத் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அண்மையில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதற்கு குட் மார்க்கை கொடுக்கவில்லை.

 

இந்த சூழலில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில், இந்தியன் 2 திரைப்படத்தை விஜய் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. அப்போது விஜயின் மேலாளர் ஜெகதீசன் உடன் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போது நிச்சயம் விஜய்யை வினோத் தான் இயக்கப் போகிறார் என்று கூறி வருகின்றனர்.

 

சற்று முன்