ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. முதல் படம் சொல்லிக் கொள்ளும்படி ஹிட்டடித்தது. இதனை அடுத்து நயன்தாரா கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் வெகுவாக பிரபலம் அடைந்தார். அந்த படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தை ஏற்று அதில் தனது சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார்.
சூழல் இப்படி இருக்க அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையத் தொடங்கின. அப்படி சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது அவரும் சிம்புவும் காதலித்தனர். ஆனால் அந்த காதல் பாதியிலேயே முடிந்தது. அது மட்டுமின்றி சிம்புவும் நயனும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அந்த சமயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த காதல் தோல்விக்கு பிறகு நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் உருவானது. ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் ரொம்பவே நொந்துபோன அவர் சினிமாவிற்கு முழுக்கு போட முடிவு செய்தார். தொடர்ந்து ராஜா ராணி படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.
அந்தவகையில் அவர் நடித்த நானும் ரவுடிதான், அறம் போன்ற படங்கள் மெகா ஹிட்டாகின. இதில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர் தற்போது ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுதவிர தனது 75வது படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். ஜவான் படம் வெற்றி பெற்றால் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா ஐயா படத்திற்கு முன்பே ஒரு படத்தில் கமிட்டானதும் ஆனால் அதிலிருந்து தூக்கப்பட்டதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாராதான். ஆடிஷனுக்கு பார்த்திபன் வர சொல்ல இவர் தாமதமாக சென்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த அவர் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று குடைக்குள் மழையில் இருந்து நயன்தாராவை வெளியே அனுப்பி இருக்கிறார்.





