- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ 3 மாதம், ஹீரோயின் 3 மாதம், டைரக்டர் 3 மாதம் - தயாரிப்பாளரிடம் ரூ....

ஹீரோ 3 மாதம், ஹீரோயின் 3 மாதம், டைரக்டர் 3 மாதம் – தயாரிப்பாளரிடம் ரூ. 2 கோடி அபராதம் வசூலித்த நடிகர்

- Advertisement -

சமீபத்தில் வெளியான சில படங்கள், அமோக வெற்றியை பெற்றன. குறிப்பாக ஜெயிலர் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபத்தை தந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சந்தோஷத்தில் ரஜினி, நெல்சன், அனிரூத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்தது தெரிந்த விஷயம்தான், ஆனால், ஓடாத படத்துக்கு ரூ. 2 கோடி அபராதமாக தயாரிப்பாளரிடம் வசூலித்த பிரபல ஹீரோ குறித்த திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் வெளியான படம் இறைவன். ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இந்த படம், போர்த்தொழில் படம் போன்றே இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் அகமது படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில், கதாநாயகி கேரக்டர் மிக சாதாரணமானது என்ற நிலையில், அறிமுக நாயகிக்கான கேரக்டருக்கு ரூ. 8 கோடி சம்பளம், நயன்தாராவுக்கு தரப்பட்டிருக்கிறது.

மேலும், படத்தின் பிரிவியூ காட்சிக்கு வந்த ஜெயம் ரவி, குழந்தைகளை கூட்டிட்டு, இந்த படத்துக்கு குடும்பத்தோடு வராதீர்கள், என ஓபனாக ஸ்டேட்மெண்ட் விடுத்தது, ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. ஒரு படத்தின் ஹீரோவாக அவர் இதைக் கூறியது, படத்தின் வெற்றிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இறைவன் படம் ஓராண்டு தாமதமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. கடந்தாண்டில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியவுடன், ஜெயம் ரவி மூன்று மாதங்கள் படப்பிடிப்புக்கு வரவில்லை. பொன்னியின் செல்வன் படத்துக்காக, அவர் உடல் கட்டழகு தோற்றத்துக்காக எடுத்துக்கொண்ட ஸ்டீராய்டு மருந்துகளால் உடல் நலம் பாதித்த நிலையில், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

அதற்கு பிறகு ஜெயம் ரவி ஷூட்டிங் வந்த போது, நடிகை நயன்தாரா திருமணம் என, அவர் வராமல், மூன்று மாதங்கள் படப்பிடிப்பு தாமதமானது. அவர் திருமணம் முடித்து வந்த போது, படத்தின் இயக்குநர் அகமது உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரால் சில மாதங்கள் தாமதம் என, படப்பிடிப்பு பல மாதங்கள் தாமதமாகி, இப்போதுதான் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இறைவன் படம் சரியாக ஓடாத நிலையில் நயன்தாராவுக்கு 8 கோடி ரூபாய், ஜெயம் ரவிக்கு 12 கோடி ரூபாய் என இந்த படத்துக்காக சம்பளம் பெற்றுள்ளனர். இதில், படத்தை மிக தாமதமாக்கி விட்டீர்கள் என தயாரிப்பாளரிடம் பஞ்சாயத்து செய்து, மேலும் ரூ. 2 கோடி தனக்கு சம்பளமாக வேண்டும் என வாங்கி இருக்கிறார் படத்தின் ஹீரோ ஜெயம் ரவி. படத்தை தாமதப்படுத்திய இவரே, படத்துக்கு குடும்பத்துடன், குழந்தைகளுடன் வராதீங்க என சொன்ன இவரே, படம் ரிலீஸ் தாமதம் என்ற பிரச்னையை கிளப்பி, ரூ. 2 கோடி, தயாரிப்பாளரிடம் அபராதம் வசூலித்திருக்கிறார் என்பதுதான் கொடுமை.

சற்று முன்