பொதுவாக இசைஞானி இளையராஜா பல படங்களுக்கு தினமும் இசையமைத்தாலும் இந்த படம் எனக்கு பிடித்த படம் இந்த காட்சி எனக்கு பிடித்தமான காட்சி என்றெல்லாம் சொல்லவே மாட்டார். அவரை பொருத்த வரை ரஜினி கமல் படங்களும் ஒன்றுதான். ராமராஜன் படமும் தனக்கு ஒன்றுதான் என்று தொழில் ரீதியாக படங்களை பார்ப்பவர்.
யார் நடித்த படமாக இருந்தாலும் இயக்குனர் கதாநாயகன் பற்றி எல்லாம் சிந்திக்காமல் அந்த படத்துக்கு எந்த அளவுக்கு சிறப்பான இசையை தர முடியுமோ அப்படி நல்ல இசையை அந்த படத்துக்கு தருவதே அவரது பாணி. அந்த வகையில் பல தோல்வி படங்கள் கூட இளையராஜா பாடல்களுக்காக ஓடியிருக்கின்றன.
இசைஞானி இளையராஜா மீது அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுவது வழக்கம்தான். குறிப்பாக அவர் தனது இசையில் உருவான பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. எனினும் தொடர்ந்து அவர் இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கேபிஒய் பாலா. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். காமெடி கேரக்டரில் பல படங்களில் நடித்த அவர் அடுத்ததாக ஹீரோவாக மாறியிருக்கிறார்.
இயக்குனர் செரீப் இயக்கத்தில் உருவான காந்தி கண்ணாடி என்ற படத்தில் முதன்முறையாக நடிகர் கேபிஒய் பாலா நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. நிச்சயமாக இனி கேபிஒய் பாலாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பலருக்கும் உதவி செய்யும் ஒரு சேவை மனம் கொண்டவராகவும் கேபிஒய் பாலா பல உதவிகளை கஷ்டப்படும் மக்களுக்கு செய்து வருகிறார்.
சமீபத்தில் இசைஞானி இளையராஜா கேபிஒய் பாலா குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து இளையராஜா கூறுகையில், பாலாவை டிவியில் அதிகமா பார்த்துட்டு இருக்கேன். நிறைய பேருக்கு உதவி செஞ்சிட்டு இருக்கான். ரொம்ப நல்ல விஷயம். இப்ப இருக்கிறவங்க யாருக்கும் அந்த மனசு வராது. ஆனால் உனக்கு அந்த மனசு இருக்கு கொடுக்கனும்ன்னு. நீ வாங்கற பணத்துல மக்களுக்கு நல்ல விஷயத்துக்காக உதவி செய்றே. இப்போ பாலாவை ரசிக்கக்கூடிய ஒரு ஆளா நான் இருக்கேன் என்று இளையராஜா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





