இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. இதற்கு முன் வியாபாரி என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார், தொடர்ந்து தனுஷூடன் படிக்காதவன் விஜயுடன் சுறா கார்த்தியுடன் சிறுத்தை பையா தோழா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் நல்ல நாயகியாக அறிமுகமான அவர் நாளடைவில் கவர்ச்சி நாயகியாக மாறினார். தெலுங்கு இந்தி படங்களில் நடித்த அவர், கவர்ச்சியாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இந்தியில் நடித்த ஒரு வெப் சீரிஸில் தமன்னா படுக்கையறை காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் தாராளமாக நடித்தார்.
பாலிவுட் நடிகைகள் எல்லையற்ற கவர்ச்சி காட்டி நடிப்பவர்கள். அவர்களுக்கே போட்டியாக தமன்னா காட்டிய எல்லை தாண்டிய கவர்ச்சியை பார்த்து இந்தி ரசிகர்களே அசந்து போய்விட்டனர். இந்தி சினிமா விருது நிகழ்ச்சிகளிலும் தமன்னாவின் கவர்ச்சியான ஆடை அலங்காரம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தமன்னா, கேரவனுக்குள் இருந்த போது தனக்கு ஏற்பட்ட தகாத சம்பவம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து தமன்னா கூறியதாவது, நான் என் கேரனுக்குள் இருந்தபோது எனக்கு விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடந்தது. அதனால் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். என் கண்கள் குளமாகி விட்டன.
நான் கண்ணிமைகளுக்கு மஸ்காராவும் முகம் முழுக்க மேக்கப்பும் போட்டு இருந்தேன். நான் ஏற்றிருக்கும் அந்த கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதனால் அப்போது என்னால் அழ முடியவில்லை. ஆனால் இப்போது எனக்கு நானே இது ஒரு உணர்ச்சி தான் இதை நான் எப்படி வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு சோகத்திலிருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாற்றிக் கொண்டேன்.
அந்த தருணத்தில் கண்ணாடியை பார்த்து என்னை நானே தேற்றிக்கொண்டு அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்தேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். எனினும் தமன்னா சொல்லும் அந்த விரும்பத்தகாத சம்பவம் எது என்பது குறித்தும் எந்த படப்பிடிப்பில் இருந்த போது கேரவனுக்குள் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பது பற்றியும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.





