நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் படம் வேட்டையன். இது ரஜினியின் 170வது படம். இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிய உள்ளது.
ஆனால் இப்போதே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த171வது படம் குறித்து பீவர் ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி விட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தான் துவங்க உள்ளது என்றாலும், படம் குறித்த முக்கிய தகவல்கள் இப்போதே வெளிவர ஆரம்பித்து விட்டன. அதுவும் வாட்ச் பின்னணியில் ரஜினி போஸ்டர் வந்த பிறகு, படம் குறித்த கவனம், ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரிக்க துவங்கி விட்டது.
லோகேஷ் கனகராஜ், மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய இயக்குனர். குறிப்பாக அவரது முதல் படம் மாநகரம் வேற லெவலில் தரமான படமாக இருந்தது. கைதி படமும், விக்ரம் படமும் போதைப் பொருளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதிலும் நிறைய வித்யாசங்களும், கதையின் கோணங்களும் மாறுபட்டு காணப்பட்டன. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இத்தகைய ஒரு சூழலில் லியோ படம் ஏமாற்றம் தந்தாலும், ரஜினிகாந்த் படம் வேற லெவலில் நிச்சயம் தரமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்வார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில், ஜெயிலர் படத்தை நெல்சனும், அனிரூத்தும் தூக்கி நிறுத்தி இருந்தனர். அது தங்கப்பதக்கம் படத்தின் காப்பியாக இருந்தும் படம் ஜெயித்து விட்டது. அதுபோல் ரஜினி 171 படமும் மாஸ் காட்டி பிளாக் பஸ்டர் மூவியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வரும் 22ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் பெயர் கழுகு என்றும், அல்லது ஈகிள் என்றும் வைக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் ராணுவ அதிகாரி, அல்லது முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற உறுதியான தகவலும் வெளிவந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதை ஒரே நாளில் நடக்கிறது. அதாவது மாநகரம், கைதி படங்களை போலவே படத்தின் கதை ஒரே நாளில் நடப்பது போல திரைக்கதையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தான் ரஜினி போஸ்டரில் வாட்ச் அதிகமாக காட்டி, இது ஒரு 24 மணி நேர சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை என்பதும் குறியீடாக காட்டப்பட்டுள்ளது. அது தெரியாமல், இதை பலரும் டைம் டிராவல் கதை என தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர். ஆக. இப்போதே ரஜினி 171 படத்தின் பல தகவல்கள் வெளியாகி விட்டன.





