இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கோட் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் தி கோட் படம் மொத்தம் 275 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில், பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தி கோட் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் அப்பா விஜயை காட்டிலும் மகன் ஜீவன் கேரக்டரில் நடித்த விஜய்க்கு நடிப்பில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதேபோல் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வில்லனை பார்த்து கொள்ளும்படி விஜய், எஸ்கேவிடம் சொல்லிவிட்டு செல்வது போல் அந்த காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. அதனால் இந்த வேலையை நான் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறார் என்று சிவகார்த்திகேயன் சொல்வது, பெரிய அளவில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது.
அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால், சினிமாவில் அவர் இடத்தில் சிவகார்த்திகேயனை இருந்து பார்த்துக்கொள்ள சொல்கிறார் என்பது போல், அந்த காட்சியை எஸ்கே ரசிகர்கள் சிலாகித்து கூறி வருகின்றனர். அதேபோல் இந்த படத்தில் 1980களில் வெள்ளி விழா நாயகனாக இருந்த நடிகர் மைக் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவருக்கு நடிக்க பெரிய அளவில் படத்தில் வாய்ப்பு இல்லை என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகச் சிறப்பாகவே நடித்து முடித்து இருக்கிறார்.
இந்நிலையில் தி கோட் படத்தில் குறிப்பிட்ட சில கேரக்டர்களில் நடிக்க டைரக்டர் வெங்கட் பிரபுவும் படக்குழும் முதலில் தீர்மானித்தது இந்த நடிகர்களை தான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இதில் நடிகர் விஜய் மகனாக ஜீவன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜயின் மகன் கேசன் சஞ்சயை தான் முதலில் தீர்மானித்துள்ளனர். ஆனால் அவர் சம்மதிக்காததால் விஜயே, மகன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.
அதேபோல் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் வரும் காட்சியில் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தக்லைப் படத்தில் நடித்துக்கொண்டு இருந்ததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. அதே போல் வில்லனாக மைக் மோகன் நடித்த கேரக்டரில், டைரக்டர் கௌதம் மேனன் நடிக்க கேட்கப்பட்டுள்ளது ஆனால் அவர் டைரக்சன் செய்வதில் அதிக ஆர்வமாக இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டார் அதன்பிறகுதான் மைக் மோகன், அந்த வில்லன் கேரக்டர் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.





