சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இதுபோக விக்ராந்த், வித்யூட் ஜமால் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதன் டைட்டில் மற்றும் டீசர் இரண்டும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. அனேகமாக கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைவதாக இருந்தது.
ஆனால் அதற்கு முன்பாக தனது 25வது திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் நடிகர். இறுதிச்சுற்று சூரரைப் போற்று என வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா உடன் தான் தற்போது சிவகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார். சுதா கொங்கரா ஏற்கனவே சூர்யாவுடன் ஒரு திரைப்படத்தில் இணைவதாக இருந்தது.
இதற்குப் புறநானூறு என்றும் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த கூட்டணி விலக தற்போது அந்தக் கதையில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவருடன் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இது ஒரு பீரியட் திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்புக்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி அதர்வா சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன்பிறகே சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தியுடன் இணைவார் என்று கூறுகிறார்கள்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் டைட்டில் புறநானூறு என்று இருக்காது எனவும், வேறு பெயர் வைக்க படலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் படத்தில் பாண்டியராஜ் மகன் ப்ரிதிவி பாண்டியராஜன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றார். தற்போது அவரும் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் இதில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





