தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கவனிக்கப்பட்டவர் நடிகர் விஷால். குறிப்பாக அவர் நடித்த ஆரம்பகால படங்களில் அவருக்கு பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்த படம் என்றால் அது சண்டக்கோழி படம்தான். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான இந்த படம்தான் விஷாலுக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
இந்த படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருந்தார். மேலும் மீரா ஜாஸ்மின் லால் தலைவாசல் விஜய் கஞ்சா கருப்பு காதல் தண்டபாணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி படமாக விஷாலுக்கு அமைந்தது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, சண்டக்கோழி படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது இயக்குனர் பாலா தான். நான் அவரிடம் கதை சொல்லி விட்டேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துப் போய்விட்டது. சூர்யா அந்த படத்தில் நடிக்கவும் அவர் முடிவு செய்துவிட்டார். ராஜ்கிரண் சூர்யா காம்பினேஷன் நினைக்கவே சந்தோஷமாக இருந்தது.
அப்போது ரன் படத்துக்கு பிறகு நான் சண்டக்கோழி படத்தை இயக்குவதாக இருந்தேன். அப்போது என்னுடைய சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்ற தகவல் வைரலாக இருந்தது. ஆனால் நான் சம்பளத்தை முடிவு செய்யவில்லை. ஜிவி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் மாதவன் நடிப்பதாகவும் அந்த படத்தை நான் இயக்க ரூ. 1.25 கோடி சம்பளம் என்றும் அப்போது ஒரு பேச்சு முடிவாகி இருந்தது. இதை என் தம்பிதான் பேசியிருக்கிறார்.
அதனால் தயாரிப்பாளராக இருந்தாலும் இயக்குனர் பாலா ஒரு டெக்னீஷியன் என்ற முறையில் என்னுடைய சம்பளத்தை எப்படி குறைக்க முடியும் என்ற மனநிலையில் இருந்திருக்கிறார். அதனால் அந்த படத்தில் சூர்யா நடிப்பது குழப்பமாக இருந்தது. ஆனால் இயக்குனர் பாலா படத்தை தயாரிப்பதாக இருந்தால் அவரிடம் நான் சம்பளமே பேசியிருக்க மாட்டேன். அதன்பிறகுதான் நான் நடிகர் விஷாலை சண்டக்கோழி படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தேன்.
ரன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினியே அழைத்து என்னிடம் கதை கேட்கிறார். சண்டக்கோழி படத்தில் ராஜ்கிரண் காம்பினேஷனில் இந்த படத்தில் யார் நடித்தாலும் அது கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் என்ற மன உறுதியும் நம்பிக்கையும் எனக்கு இருந்தது. அதனால் சூர்யா நடிக்க வேண்டிய அந்த கேரக்டரில் நான் விஷாலை நடிக்க வைத்தேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.





