- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை திருடியது ஏன்? அவர்தான் என்னை செய்ய தூண்டி விட்டார் - கைது செய்யப்பட்ட...

ஜனநாயகன் படத்தை திருடியது ஏன்? அவர்தான் என்னை செய்ய தூண்டி விட்டார் – கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி தந்த வாக்குமூலம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது திரைக்கு வரும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இணையத்தில் ஜனநாயகன் படம் திடீரென வெளியானது.

முதலில் ஐந்து நிமிட காட்சி மட்டுமே வெளியான நிலையில் அன்று இரவே எச்டி தரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இது ஜனநாயகன் படக்குழுவினர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை இயக்கிய இயக்குனர் எச் வினோத் உள்ளிட்ட பலரையும் அதிர்ச்சியில் தள்ளியது.

- Advertisement -

மேலும் திரையில் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திரைப்பட உதவி எடிட்டர் பிரசாத் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட உதவி எடிட்டர் பிரசாத் போலீசில் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

போலீசார் விசாரணையில் வாக்குமூலமாக அவர் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் படம் எடிட்டிங் செய்யப்பட்ட இடத்தில் நானும் நண்பர்களும் வேறு ஒரு படத்திற்கான எடிட்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு என் சகோதரியின் நண்பரும் மென்பொருள் பொறியாளருமான ஒருவரும் வேலை பார்த்து வந்தார்.

அவர் எங்களிடம் ஜனநாயகன் பணத்தை திருடி வெளியிட்டால் பெரும் தொகை தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டினார். குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து ஜனநாயகன் படக் காட்சிகளை திருடி அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று எடிட்டிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டோம் என்று அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்