- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போறது யார் தெரியுமா? -...

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போறது யார் தெரியுமா? – அட சமீபத்தில் இவர் ஒரு கலக்கு கலக்கிய நடிகராச்சே… சூப்பர் செலக்சன்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் ரிலீசான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 275 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. வெளிநாடுகளில் 97 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் படத்துக்கு ரசிகர்கள் பேராதரவு தந்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் திரைப்பட இயக்கம் சார்ந்த படிப்பை முடித்திருக்கிறார். அவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியும் உள்ளார். விஜயை போலவே அவரது மகனும் ஒரு பெரிய நடிகராக மாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல படங்களை இயக்குவதில், இயக்குனராவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் ஒரு புதிய படம் உருவாகிறது. பல மாதங்களுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக ஜேசன் சஞ்சய் ஸ்கிரிப்ட் ரைட்டிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் அவரது படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மகன் துரு விக்ரம், மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நடிகர் சூரி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்கள் யாருமே இதற்கு சம்மதிக்காத நிலையில் விஜய் மகன் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இப்போது லேட்டஸ்ட் தகவலாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இவர் சமீபத்தில் வெளியான, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் அவரது சகோதரர்களின் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த நீ இருக்கறயே ஓலைக் கொட்டாயா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தில் சந்தீப் கிஷன் தனுஷின் தம்பியாக இருந்தும், ஒரு கட்டத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யாவுடன் சேர்ந்துக்கொண்டு தனது அண்ணன் தனுஷையே கொல்ல முயற்சிப்பார் என்பது இந்த படத்தில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக இருந்தது. ராயன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சந்தீப் கிஷன், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நாயகனாக நடிப்பது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்