- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கப் போகும் விஜயின் மகன்... கதாநாயகர்களாக நடிக்க போவது இவர்கள்தான்... இந்த...

அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கப் போகும் விஜயின் மகன்… கதாநாயகர்களாக நடிக்க போவது இவர்கள்தான்… இந்த முறை அறிவிப்பு வந்துரும் போல இருக்கே…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாக நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறுகிறதோ இல்லையோ வசூலில் எந்த வித குறையும் வைப்பது இல்லை. குடும்ப ஆடியன்ஸ்களும், இள வட்டாரங்களும் அவரது பக்கம் இருப்பதால் விஜயின் படத்திற்கு என ஒரு தனி மாஸ் இருக்கிறது.

 

இப்படியான சூழலில் தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாவதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்கள். விஜய்யின் மகன் சஞ்சய், லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட புகைப்படங்களும் வெளியாகின.

 

ஏற்கனவே தனது மகனை திரைத்துறையில் கொண்டு வருவதற்கு விஜய் ஆர்வமுடன் தான் இருந்தார். வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலில், விஜய் தனது மகனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருப்பார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், தான் எதிர்பார்த்ததை விட தனது மகன் நன்றாக நடனம் ஆடியதாக கூறியிருந்தார்.

 

இப்படியான சூழலில், திரைக்கதை எழுதுவது தொடர்பான கல்வி பயில்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றார் சஞ்சய். அங்கு கல்வி பயிலும்போதே, அவர் குறும்படங்களை இயக்கி வந்தார். இப்படியான சூழலில் தான் அவருக்கு புதிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

 

ஆனால் ஓராண்டு கடந்தும் இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் தான், ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனுடன் இணைந்து தனது முதல் படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட இது உறுதியும் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதே வேளையில் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணியிலும் விஜயின் மகன் இறங்கி இருக்கிறார். இந்த முறை அவர், தனது இரண்டாவது திரைப்படத்திற்காக விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் இணைய இருக்கிறாராம். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை அவர் இயக்க இருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

சற்று முன்