- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மகன் இயக்கும் படத்தின் கதை இதுதானாம்... ஒர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் கேள்வி...

விஜய் மகன் இயக்கும் படத்தின் கதை இதுதானாம்… ஒர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

நடிகர் விஜய்க்கு இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. அவரது திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக கல்லா கட்டுவதால் விஜய் படத்திற்கு என்று ஒரு மவுசு இப்போது வரை உள்ளது.

இவரது மகன் ஜேசன் சஞ்சய், வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு அவர் தனது தந்தையுடன் ஆடிய நடனம் பலரையும் கவர்ந்தது. அதன்பிறகு அவர் வெள்ளித்திரையில் காட்சியளிக்கவே இல்லை.

- Advertisement -

இப்படியான சூழலில் லண்டனுக்கு சென்ற சஞ்சய் அங்கு திரைக்கதை எழுதுவது தொடர்பான மேற்படிப்பை தொடர்ந்தார். மேலும் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களையும் அவர் இயக்கி வந்தார். நடிப்பை விட இயக்கத்திலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இப்படியான சூழலில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரது தமிழ் சினிமாவில் புதிய திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

லைக்கா நிறுவனம் திரைப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிறது. அதன் அடுத்த கட்ட அப்டேட் குறித்து மட்டும் எந்த ஒரு தகவலும் வெளியாகவே இல்லை. ஆனால் நாளுக்கு நாள் படத்தின் கதாநாயகர்கள் தேர்வு மட்டும் மாறி வருவதாக கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

முதலில் கவின் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு துருவ் விக்ரம் படத்தில் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும், படத்தில் இன்னும் கதாநாயகன் தேர்வு செய்யப்படவில்லை என்றும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. கடைசியாக துல்கர் சல்மான் படத்தில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் அவரால் இதனை தொடர முடியாமல் போனது. ஏற்கனவே தக் லைப் படத்தில் இருந்தும் அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில் ஜேசன் சஞ்சய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இது கிரிக்கெட்டை மையப்படுத்தி எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் ஃபிக்ஸ் செய்திருக்கும் சஞ்சய் தற்போது பிரி ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறாராம். இது கிரிக்கெட் தொடர்பான படம் தான் என்றாலும் அது ஒருத்தரின் பயோபிக் படமா அல்லது எதார்த்தமான விளையாட்டு களமா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்