- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்துக்கு பெயர் வைத்தது அவரா? - 23 ஆண்டுகளுக்கு பிறகு...

கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்துக்கு பெயர் வைத்தது அவரா? – 23 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான உண்மை!

- Advertisement -

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்துக்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைக்கப்பட்டது. அப்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் அந்தப் பெயர் மாற்றப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் விருமாண்டி என படத்துக்கு பெயர் வைக்குமாறு கமலிடம் ஆலோசனை கூறியிருக்கிறார். படத்தின் கதாநாயகன் பெயரையே படத்துக்கு டைட்டிலாக வைத்து விடுங்கள் என்று அவர் கூறியதால் தான் விருமாண்டி என கமல் பெயர் வைத்திருக்கிறார். 23 ஆண்டுகள் கழித்து இப்போது அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல் சண்டியர் என்ற படத்தில் நடிக்கிறார். இப்போதும் அதற்கு கிருஷ்ணசாமி சண்டியர் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சற்று முன்