நடிகர் ரஜினிகாந்த் இன்று திமுக குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கலாம். கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் பங்கேற்ற விழாக்களில் தனக்கு அருகே ரஜினிகாந்தை அமர வைத்து பெருமை செய்திருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ரஜினிக்கு ஒரு பெரிய பிரச்னை ஏற்பட்ட காலகட்டத்தில் கருணாநிதி உதவ முன்வரவில்லை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருப்பதானது, இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் உண்மை நடந்தது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, சுல்தான் தி வாரியர் என்ற படத்தை தயாரித்தார். அதற்காக ஒரு பைனான்சியரிடம் பெரிய தொகையை கடன் வாங்கினார். ஆனால் அந்த கடனை வாங்கிவிட்டு அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார்.
கடன்கொடுத்தவர் பலமுறை போன் செய்தாலும் அவர் எடுப்பதே இல்லை. அப்போது திமுக ஆட்சிக்காலம். கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். அப்போது உச்சத்தில் இருந்த ஒரு சேனலில் உச்ச அதிகாரியின் உதவியை சௌந்தர்யாவுக்கு கடன் கொடுத்தவர் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறார். அந்த உயர் அதிகாரி பெரிய செல்வாக்கில் இருந்தவர். கருணாநிதி அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அதனால் அந்த அதிகாரியும் அவருடன் இருந்த சிலரும் தங்களுடைய ஆட்களை அனுப்பி சௌந்தர்யா அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி நாசம் செய்து விட்டார்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த ரஜினிக்கு ஷாக் ஆகி விட்டார். என்னுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரஜினி ரொம்பவும் நொந்து போய்விட்டார். இதுகுறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் அமைதியாக இருந்து விட்டார். அது நடந்து முடிந்து விட்டது.
இந்த சூழலில் திமுக ஆட்சி இழந்து அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடந்த இந்த விவகாரத்தைப் பற்றி ரஜினிகாந்த், ஜெயலலிதாவிடம் வெளிப்படையாக கூறியிருக்கிறார். உடனே ஜெயலலிதா அந்த உயர் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்து ஸ்டேஷனில் உள்ளாடைகளுடன் அமர வைத்திருக்கிறார்.
தன்னுடைய பிரச்னையை சொன்னவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா மீது ரஜினிக்கு பெரிய மரியாதை வந்துவிட்டது. அதனால்தான் ஜெயலலிதாவுடன் மோதலில் இருந்த ரஜினிகாந்த் இதற்கு பிறகு அவரை தைரியலட்சுமி என்று புகழ்ந்தார் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இப்படி ஒரு சம்பவம் அப்போது நடந்ததா என்று இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





