தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். அதில் ஜீவா ஆர்யா ஜெயம் ரவி விஷால் கார்த்தி சிம்பு தனுஷ் போன்றவர்களுக்குள் நெருக்கமான நட்பு நீடிக்கிறது. அதிலும் நடிகர் ஆர்யாவுக்கும் ஜீவாவுக்கும் மிகவும் நெருக்கமாக நட்பு நீடிக்கிறது. சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யாவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவாவும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜீவா கூறியதாவது, நான் நடிச்ச சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடிக்க ஆர்யாவை கூப்பிட்டேன். அவருக்கு போன் செய்து, மச்சா இந்த படத்துல ஒரு கேமியோ இருக்கு, நீ நடிச்சா நல்லா இருக்குமுன்னு டைரக்டர் பீல் பண்றார். வர்றியாடா என்றேன். உடனே ஓகே மாமா என்று சொல்லிட்டு நேரில் ஆர்யா வந்துவிட்டார்.
அந்த காட்சியில் நடித்து விட்டு அந்த டைரக்டரை தூக்கிட்டு போயிட்டார். அதுதான் அவர் நடிச்ச பாஸ் என்கிற பாஸ்கரன் படம். நான் ஏற்கனவே எம் ராஜேஷூடன் இன்னொரு படம் பண்ணலாம் என்று நினைச்சுட்டு இருந்தேன். ஆனா டைரக்டரை தூக்கிட்டு போயிட்டார். டேய் உன்னை கேமியோ ரோலுக்கு கூப்பிட்டதே தப்பா போச்சுடா என்று நினைத்துக்கொண்டேன்.
அதற்கு அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் என்னை கேமியோ ரோலில் நடிக்க ஆர்யா கூப்பிட்டார். ஒரு நாள்தான் என்று போனால், மேலே கயிறு எல்லாம் கட்டி இருக்கிறாங்க. ஏண்டா மச்சா ஒருநாளுன்னு தானே கூப்பிட்டே என்று கேட்டேன். அப்புறம் சீன் சீக்குவன்ஸ் அது இதுன்னு சொல்லி சமாளிச்சு நடிக்க வெச்சுட்டார்.
அப்புறம் பார்த்தா, ஓகே மாமா கிளம்புறேன்னு அவன் ஷூட்டிங்கை முடிச்சுட்டு போறான். நான் அப்புறமும் நடிச்சுட்டு இருக்கேன். அந்த படத்துல நடிச்ச நயன்தாரா சித்ரா லட்சுமனண் எல்லாம் என்கிட்ட வந்து பாய் சொல்லிட்டு போறாங்க. நான் அப்பவும் நடிச்சிட்டு இருக்கேன். என்னடா எல்லாரும் போறாங்க, நான் இன்னமும் இங்க இருக்கேன் என்று புலம்பினேன்.
என்னடா இது கேமியோ ரோலுன்னு தானே கூப்பிட்டீங்க என்றேன். ஆனால் அடுத்த நாள் கூப்பிட்டாங்க, அடுத்த நாளும் கூப்பிட்டாங்க, இப்படியே நாலு நாள் ஆகிடுச்சு. அடப்பாவி உன்னை நான் கூப்பிட்டு என் படத்துல அரைமணி நேரத்துல திருப்பி அனுப்பிச்சேன்டா. ஆனா என்னை இப்படி நாலு நாள் பண்ணிட்டீங்களேடா. முடிக்கவே மாட்டேன்கறீங்க என்று கத்தினேன். கடைசியில் அந்த படத்தில் நடிச்சது டபுள் கேமியோ மாதிரி ஆயிடுச்சு என்று நடிகர் ஜீவா கூறியிருக்கிறார்.





