- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட்டில் ஹீரோவாகும் சூர்யா... பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்... நடிகருடன் ஜோடி சேரும் மறைந்த நடிகையின் மகள்...

பாலிவுட்டில் ஹீரோவாகும் சூர்யா… பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்… நடிகருடன் ஜோடி சேரும் மறைந்த நடிகையின் மகள்…

- Advertisement -

சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றன. முந்தைய பிறவிக்கும் தற்காலத்திற்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

சூர்யா நடித்ததிலேயே அதிகமான செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் வருகிறார். யோகி பாபு, கோவை சரளா நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் கங்குவா, ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சூர்யாவின் போஸ்டர் வெளியான நிலையில், வில்லன் பாபி தியோலின் மிரட்டலான லுக் கொண்ட போஸ்டரும் வெளியிடப்பட்டது. கடந்தாண்டு சூர்யாவிற்கு எந்த திரைப்படமும் வெளியாகாததால், கங்குவா படத்தை அவர் மிகப்பெரிய அளவில் நம்பி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா உடன் இணைகிறார் சூர்யா. அவர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படத்திலேயே இணைவார் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இயக்குனர் விடுதலை படத்தில் பிஸியாகி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி எனும் மிகப்பெரிய வெற்றியை சுதா கொங்கரா கொடுத்திருப்பதால், இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

படத்தின் பின் தலைப்பான புறநானூறு மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். மொழிப்போரை மையப்படுத்தியும், இந்தி மொழி திணிப்பு குறித்தும் இந்தத் திரைப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திருச்சி சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் சூட்டிங் நடைபெறுகிறது.

இப்படியான சூழலில் சூர்யாவின் இந்தி திரைப்படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்தியின் புகழ்பெற்ற இயக்குனரான ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்குகிறார். மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் மையமாக வைத்து பிரம்மாண்ட முறையில் இந்த திரைப்படம் உருவாகிறதாம். இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்