- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலியல் விவகார வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், போலீசார் விசாரணையில் அளித்த வாக்குமூலம்...

பாலியல் விவகார வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், போலீசார் விசாரணையில் அளித்த வாக்குமூலம் – என்ன இப்படி கதையை மாத்தி சொல்லி இருக்கிறாரே?

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருந்து வருபவர் ஜானி மாஸ்டர். காவலய்யா, மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே, ரஞ்சிதமே போன்ற பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். சமீபத்தில் சிறந்த நடன கலைஞர் தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரிடம் பணி செய்த நடன பெண் கலைஞர் ஒருவர், தன்னை ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தல் செய்தததாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஜானி மாஸ்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

- Advertisement -

மேலும் மைனர் வயதில் இருந்த நடனக் கலைஞரை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே போலீசாருக்கு பயந்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். கோவாவில் பதுங்கி இருந்த அவரை, ஐதராபாத் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கு பிலிம் சேம்பரில் அவரை திரைப்படங்களில் பணிசெய்ய அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதே போல் ஆந்திராவில் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் இருந்தும் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில், போலீசாரிடம் ஜானி மாஸ்டர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, பாலியல் ரீதியாக என் மீது அந்த பெண் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவர் ஒரு நிகழ்ச்சியில்தான் எனக்கு பழக்கமானார். அவர் மைனராக இருந்தபோது நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் சொல்கிறார்.

அந்த பெண்ணிடம் திறமை இருந்தது. அதனை அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் உதவி நடன இயக்குனராக சேர்த்துக் கொண்டேன். அதற்குப்பின் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனரீதியாக டார்ச்சர் செய்து கொண்டே இருந்தார். பலமுறை மிரட்டவும் செய்தார். எனக்கு எதிராக சதி நடந்து கொண்டிருக்கிறது. அந்த பெண்ணின் பின் யாரோ இருக்கின்றனர். எனது வளர்ச்சியை சிலரால் தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள்தான், என்னை இதில் சிக்க வைத்து இருக்கின்றனர் என்று அவர் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்