சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற பிம்பம் இருக்கிறது. அதையெல்லாம் உடைத்து தற்போதுதான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்குள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இன்னமும் சினிமா என்றாலே அச்சம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு அவர்கள் மேல் எந்த தவறும் செய்ய முடியாது. ஏனெனில் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான ஆண்கள் அப்படி.
படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் ஆக வேண்டுமென்ற நிலை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. அது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான். இருந்தாலும் ஒரு சிலர் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை வெளியில் பகிர்கின்றனர். அந்த மாதிரிதான் நடிகை விசித்திராவும் 2001ஆம் ஆண்டு நடந்த மோசமான அனுபவத்தை சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பகிர்ந்துகொண்டார்.
அவர் பகிர்ந்த விஷயம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கமல் ஹாசன் இந்த வாரம் என்ன பேசப்போகிறார் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அவர் பேசிய வீடியோவில், “பாலியல் தொல்லை என்ற பிரச்னை விசித்திராவுக்கு மட்டுமில்லை சினிமாவில் இருக்கும் பல நடிகைகளுக்கு நடந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்னையை மன தைரியத்துடன் எதிர்கொண்டு சினிமாவில் வென்றவர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து சினிமாவே வேண்டாம் என்று ஓடிய நடிகைகளும் இருத்தான் செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஆனால் நடிகையின் பெயரை சொல்லமாட்டேன். ஏனென்றால் அவர் இப்போது குடும்பத்துடன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அந்த நடிகை ஹீரோயினாக மாற வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு தெலுங்கில் ஒரு பெரிய நடிகருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
ஆந்திரா சென்று அந்த ஹீரோவை சந்தித்துவிட்டு அவரும் தாயும் ஹோட்டல் ரூமில் இருந்தனர். இரவு 11 மணி அளவில் கதவை தட்டி திடீரென அந்த ஹீரோ உள்ளே வந்துவிட்டார். இதனால் பயந்துபோன நடிகையும் அவரது தாயும் நடிகரின் காலை பிடித்து கதறி அழுதனர். சார் எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை விட்டுவிடுங்கள் என கதறியிருக்கின்றனர்.
இதனை பார்த்து கோபமான நடிகர் இப்போதே இந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். காலையில் நான் உங்களை பார்க்கக்கூடாது என கூறினார். இவர்கள் விட்டால் போதும் என்று முடிவெடுத்து நள்ளிரவே அந்த ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டனர். அதற்கு பிறகு அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்” என்றார்.





