- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சனுக்கு காத்திருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு, ஜெயிலர் பட தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்,...

நெல்சனுக்கு காத்திருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு, ஜெயிலர் பட தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ், வேற லெவல் பண்ணிருக்காரே?

- Advertisement -

நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் சரிவர போகவில்லை என்பதால் நெல்சன் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது “ஜெயிலர்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. “இந்த வாட்டியாவது பந்தயம் அடிச்சிடுங்க நெல்சன்” என்று ரசிகர்கள் நெல்சனுக்கு உற்சாகமூட்டி வந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடி “ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மாஸ் ஹிட் ஆகியுள்ளது. உலகளவில் சுமார் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம். இது கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்தின் வசூலுக்கு நிகரான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனராம். குறிப்பாக “ஜெயிலர்” திரைப்படத்தை தயாரித்த கலாநிதி மாறன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம். சமீப காலமாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.

இவ்வாறு நெல்சனுக்கும் சரி, ரஜினிகாந்திற்கும் சரி, “ஜெயிலர்” திரைப்படம் அவர்களது கெரியரில் ஒரு முக்கிய திரைப்படமாக ஆகியுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சனுக்கு ஒரு மிகப் பெரிய பரிசை கொடுக்க தயாராகி உள்ளாராம்.

- Advertisement -

அதாவது பல கோடிகள் மதிப்பிலான 8 விதமான கார்களின் பெயர்களை கலாநிதி மாறன் நெல்சனுக்கு அனுப்பியுள்ளாராம். “அதில் எந்த கார் வேண்டுமோ அந்த காரை தேர்வு செய்து சொல்லுங்கள், அதையே உங்களுக்கு நான் பரிசாக வழங்குகிறேன்” என்று கூறியுள்ளாராம்.

அதன் படி அந்த 8 கார்களையும் நெல்சன் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடித்துள்ளாராம். நெல்சன் எந்த காரை தேர்ந்தெடுக்கிறாரோ அந்த காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்க உள்ளாராம்.

- Advertisement -

சற்று முன்