அன்று முதல் இன்று வரை மலையாள சினிமாவை ரசிகர்கள் கொண்டாட காரணம், அவர்கள் கதைகளை மட்டுமே நம்பி படம் எடுப்பவர்கள். கதைக்கு தான் நாயகனே தவிர, நாயகனுக்காக அவர்கள் கதைகளை உருவாக்குவது இல்லை. அதனால் எந்த ஹீரோ நடித்து இருந்தாலும், கதை சிறப்பாக இருந்தால் படம் ஜெயித்து விடுகிறது.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த படம் திரிஷியம். இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. தனது பிள்ளைகள், மனைவி என குடும்பமே வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வரும் நாயகன், நாயகிக்கு பெரிய போலீஸ் அதிகாரி மகன் வில்லனாக வீட்டுக்குள் புகுந்து விடுகின்றனர்.
தவறுதலாக நடக்கும் ஒரு சம்பவத்தில், அந்த போலீஸ் அதிகாரி மகன் இறந்துவிட அந்த கொலையை கதாநாயகன் குடும்பம் மறைப்பதும், அதற்காக அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளும் இறுதியில் தன் குடும்பத்தை போலீஸிடம் இருந்து காப்பாற்ற நாயகன் போராடுவதே திரிஷியம் படத்தின் கதை.
மலையாளத்தில் மாபெரும் வெற்றியும் வரவேற்பும் பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த படத்தில் நாயகனாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அவரிடம் திரிஷியம் படம் போட்டுக் காட்டப்பட்டு அவரை நாயகனாக நடிக்க கேட்கப்பட்டது.
ஆனால் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்ற அழுத்தமான ஒரு கேரக்டரில் நடிக்க என்னைவிட சிறந்தவர் நடிகர் கமல்ஹாசன்தான். அவரை இந்த கேரக்டரில் நடிக்க வையுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். மேலும் கமல்ஹாசனிடம் திரிஷியம் படம் குறித்து பேசி நீங்கள் நடித்தால் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
அதன்பிறகுதான் திரிஷியம் படம் பார்த்த கமல்ஹாசன் அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். அதன்பிறகுதான் அந்த படம் பாபநாசம் என்ற பெயரில் உருவானது. சுயம்புலிங்கம் என்ற கேரக்டரில் கமலும் ராணி என்ற கேரக்டரில் நடிகை கௌதமியும் நிவேதா தாமஸ் எஸ்தர் அனில் கலாபவன் மணி எம்எஸ் பாஸ்கர் சார்லி வையாபுரி என பலரும் அந்த படத்தில் நடித்தனர் என்ற இந்த புதிய தகவல் இப்போது வெளியாகி உளளது. பாபநாசம் படம் தமிழில் பெரிய வெற்றிப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





