நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது 7வது ஆண்டாக 7வது சீசன் நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் நிறைவடைய உள்ளது. இந்த முறை நடிகை விசித்ரா பிக்பாஸ் வின்னராக வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். மூன்றுமுறை தேசிய விருதுகளை வென்றவர். பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்றனர். நடிகர், நடனக்கலைஞர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், டைரக்டர் என பன்முக தன்மை கொண்டவர்.
சமீபத்தில் 69வது பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன், இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, கல்கி இப்போது நடித்து வரும் கமல் அடுத்து மணிரத்னம் இயக்கும் தக்லைப், எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க உள்ளார். இடையிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் சினிமா துறையில் போற்றப்படும் ஒரு உயர்ந்த நிலையில் சிறந்த கலைஞராக புகழ்பெற்றவர். அவர் டிவி ஷோவில் பங்கேற்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையிலான பிரச்னைகளை பஞ்சாயத்து செய்வதும் அவர் மீது அபிமானம் கொண்டுள்ள பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பலரது வேண்டுகோளை மீறி கமல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி ரூ. 150 கோடி சம்பளம், அரசியல் கருத்துகளை சொல்ல ஒரு மேடையாகவும் கமலுக்கு இந்த நிகழ்ச்சி இருக்கிறது. ஆனால், சமீபமாக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர் சரவணன் விக்ரம் தந்தை, மாயாவிடம் கமலை பற்றி விமர்சித்து பேசியது, பார்வையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
என் மகனை எதற்காக காக்ரோச், காக்ரோச் என அழைக்கிறீர்கள். என் மகன் கரப்பான் பூச்சி மாதிரியா இருக்கிறான் என மாயாவிடம், சரவணன் விக்ரமின் தந்தை கேட்கிறார். மாயா, ஏதோ பதில் சொல்ல நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு போக, நான் ஒன்றும் வாரக்கடைசியில் வரும் கமல்ஹாசன் அல்ல என்றும் மாயாவை திட்டுகிறார். இது பெரும் சர்ச்சையானதால், ஓட்டு எண்ணிக்கையை காரணம் காட்டி, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர் சரவணன் விக்ரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.





