- Advertisement -
Homeபொழுதுபோக்குகடற்கரையில் நினைவிடம் இருக்காது… வேதனையில் புலம்பிய ஒளி ஓவியர் தங்கர் பச்சான் - தகைசால் தமிழரே...

கடற்கரையில் நினைவிடம் இருக்காது… வேதனையில் புலம்பிய ஒளி ஓவியர் தங்கர் பச்சான் – தகைசால் தமிழரே என புகழஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்!

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 101. உடல் நலக்குறையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நல்லக்கண்ணு மறைந்தார்.

மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நடிகர் விஜய் சூர்யா உள்ளிட்டோரும் நல்லக்கண்ணு உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் வாழ்க்கையில் பொது வாழ்க்கையில் மிகவும் நேர்மையான தன்னலமற்ற ஒரு தலைவராக வாழ்ந்து மறைந்தவர் நல்லக்கண்ணு ஐயா.

- Advertisement -

தோழர் நல்லக்கண்ணு மறைவு குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர். பொது நலத்திற்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு ஐயா நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார்.

ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர். தகைசால் தமிழரே… செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் என்னில் தொடரட்டும் என்று அந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் இயக்குனர் என்ற அடையாளங்களை கொண்டார் தங்கர் பச்சான். ஒளிஓவியர் எனவும் அழைக்கப்படுபவர். அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கடலூரை சேர்ந்த தங்கர்பச்சான் கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயா மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் இயக்குனர் தங்கர் பச்சான் கூறியிருப்பதாவது, தோழர் நல்லக்கண்ணு ஐயா நேர்மையின் அடையாளமாகத் திகழ்கிறார். அவரை போட்டிப் போட்டுக் கொண்டு புகழ்ந்து இரங்கல் தெரிவிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரிடமிருந்து எதையெல்லாம் கற்றுக் கொண்டார்கள்? இவரைப் பார்த்து இனிமேலாவது எதை எதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு கற்றுத்தரப் போகிறார்கள்? இவரைப் போன்றவர்களுக்கு எல்லாம் கடற்கரையில் நினைவிடம் எழுப்ப மாட்டார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்