- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீர் அறிவிப்பை வெளியிட்ட மக்கள் நீதிமய்யம் - நேர்மையான கொம்பன்தான் என நிரூபித்த ஆண்டவர் கமல்ஹாசன்!

திடீர் அறிவிப்பை வெளியிட்ட மக்கள் நீதிமய்யம் – நேர்மையான கொம்பன்தான் என நிரூபித்த ஆண்டவர் கமல்ஹாசன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் முற்போக்கான சிந்தனைகளை தனது படங்களில் ரசிகர்களுக்கு சொன்னவர். வழக்கமான ஹீரோக்களின் படங்களை விடவும் கமல்ஹாசனின் படங்களில் பல சமூக கருத்துகளும் காணப்படும். அவர் கடவுள் மறுப்பாளர் என்பதையும் தாண்டி சமூகம் சார்ந்த பல கருத்துகளும் அவரது படங்களில் வெளிப்படும்.

அதில் சினிமா அரசியல் சாதி மதம் சார்ந்த பல விஷயங்களும் அவரது படங்களில் உள்ளடக்கமாக காணப்படும். என்றாலும் சகலகலா வல்லவன் போன்ற மசாலா படங்களிலும் நான் நடித்திருக்கிறேன் என்று கமல்ஹாசனே சில நேர்காணல்களில் வருத்தப்பட்டும் பேசியிருக்கிறார். ஆனால் இதுவரை மசாலா படங்களை மட்டுமே நம்பி நடித்துக்கொண்டிருப்பவர் அவரது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வருவார் என மக்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அவருக்குதான் அரசியல் களத்தில் இறங்குவதற்கான சில அறிகுறிகளும் வரவேற்பு நிலைகளும் காணப்பட்டன. ஆனால் அவர் வராமல் போய்விட திடீரென அரசியல் களத்தில் டார்ச் லைட்டுடன் குதித்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவில் திரை நட்சத்திரமாக ஜொலித்த கமல்ஹாசனால் அரசியல் களத்தில் பிரகாசிக்க முடியவில்லை. இந்த சூழலில் திமுக ஆதரவாளராக மாறிய அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கிடைத்து விட்டது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தும் தன் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகளை கமல்ஹாசன் வேண்டாம் என மறுத்துவிட்டார்.

- Advertisement -

இந்த சூழலில் தேர்தலில் போட்டியிட 60 பேர் தலா 50 ஆயிரம் வீதம் டெபாசிட் தொகை செலுத்திய நிலையில், அது கட்சி வளர்ச்சி நிதிக்கு போய்விட்டதாக கட்சி தலைமை தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேர்மையான கொம்பன் என பேசும் கமல்ஹாசன் இப்படி செய்யலாமா என கேள்வி எழுந்த நிலையில், நான் நேர்மை தவறாத கொம்பன் தான் என இன்று கமல்ஹாசன் நிரூபிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மையம் தலைமை அலுவலகம் தரப்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் நேரில் வந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்