- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு இத்தனை ரோலா... மணிரத்னத்தின் மாஸ்டர் மூவ்... சிலாகிக்கும் ரசிகர்கள்...

தக் லைப் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு இத்தனை ரோலா… மணிரத்னத்தின் மாஸ்டர் மூவ்… சிலாகிக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

கமல்ஹாசனுக்கு அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே எடுத்துள்ளார். படத்தில் பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவு பெரியதாக காணவில்லை. இந்தியன் திரைப்படத்திலிருந்து அந்த உயிரோட்டம் இதை பார்க்கும்போது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை மணிரத்னம் இயக்குகிறார்.

ஏற்கனவே இந்த ஜோடி இணைந்து நாயகன் திரைப்படத்தை எடுத்தது. இந்த திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகளை கடந்திருக்கும் சூழலில், தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் அறிமுக வீடியோவை பலரையும் கவர்ந்தது.

- Advertisement -

தக் லைப் என பெயர் இடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், கமல்ஹாசன் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் பலரையும் வெகுவாக கவர்ந்தன. இதில் திரிஷா துல்கர் சல்மான் ஜெயம் ரவி ஐஸ்வர்யா லட்சுமி கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் சிம்பு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தற்போது இதன் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது படத்தில் கமல்ஹாசன் மூன்று ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இரண்டு காலகட்டங்களில் படத்தை எடுக்கவும் மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறாராம். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வெளிநாடுகளில் இதன் சூட்டிங் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்