- Advertisement -
Homeபொழுதுபோக்குகாஞ்சனா 4 ஷூட்டிங் எப்போது துவங்கும்? லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்...

காஞ்சனா 4 ஷூட்டிங் எப்போது துவங்கும்? லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ் – அந்த விஷயத்தை முடிச்சிட்டேன்னு சொல்றாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனரான இவர் சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல்காட்சி மூலம் திரையில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அந்த முதல் பாடலிலேயே நடனத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் பிரசாந்த், லைலா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோ கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து அற்புதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ராகவா லாரன்ஸ், அடுத்து ஸ்டைல் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே ராகவா லாரன்ஸ்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை. அதைத்தொடர்ந்து முனி என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகன் நடித்தார்.

முனி படத்தில் வேதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். வினு சக்கரவர்த்தி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்தப் படம் தான் காஞ்சனா சீரிஸ் படங்களின் முதல் துவக்கமாக இருந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய படங்களை கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து காஞ்சனா 4 படத்தை நடித்து இயக்க தயாராகி வருகிறார்.

- Advertisement -

அதற்கு முன்னதாக இப்போது மற்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். தனது இயக்கத்தில் திகில் படங்களை தருவது மட்டுமின்றி மற்ற இயக்குனர்களின் படங்களில் மாஸ் ஹீரோ கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ருத்ரன் படத்தில் பெரிய பவானி சங்கர் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், காஞ்சனா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். காஞ்சனா 4 கதையை எழுதி முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறியிருக்கிறார். அதனால் காஞ்சனா 4 ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்