கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை டைரக்ட் செய்த ரிஷப் ஷெட்டி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என தொடர்ந்து பிற மொழிகளில் வெளியான காந்தார படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
இப்போது காந்தாரா படத்தின் அடுத்த பாகம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படம், காந்தாரா கதைக்கு முந்தைய காலகட்டத்தில் உருவான படமாக இருப்பதால் இதற்கு காந்தாரா அத்தியாயம் 1 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் கன்னடம் உட்பட மொத்தம் 7 மொழிகளில் வெளியாகிறது.
ஹொம்பாலே திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கேஜிஎஃப் உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது. இப்போது காந்தாரா அத்தியாயம் 1 படத்தை அதைவிட பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. கன்னடம் இந்தி தமிழ் மலையாளம் தெலுங்கு பெங்காலி ஆங்கிலம் என ஏழு மொழிகளில் காந்தாரா 1 படம் வெளியாக உள்ளது.
இதில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்பானிஷ் மொழியில் டப்பிங் செய்து காந்தாரா 1 படத்தை வெளியிடுவது குறித்து ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதுவரை நடந்த பல சினிமா சாதனைகளை முறியடிக்க காந்தாரா 1 படம் பெரி அளவில் சாதனைகளை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தாரா 1 படம் வெளியாக உள்ளது. காந்தி ஜெயந்தி தினத்தில் இந்த படம் வெளியாகும் நிலையில், இன்னும் 16 நாட்களே உள்ளன. காந்தாரா 1 படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் 33 கோடி ரூபாய்க்கு மேல் தியேட்டரிக்கல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காந்தாரா 1 படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக இந்தியா துபாய் மலேசியா சிங்கப்பூர் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்தாரா 1 படம் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் இந்த படம் வெளியாவதால் இன்னும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.





