சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என அழைக்கப்படும் அருள் சரவணன் ஆரம்பத்தில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சினிமாவிலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
அவரது நடிப்பில் வெளியான முதல் படம் லெஜண்ட். இந்த படம் சுமாராக ஓடிய நிலையில் அவர் தனது 2 படமாக லீடர் என்ற படத்தில் நடித்தார். இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் லெஜண்ட் சரவணனுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி லீடர் படம் வெளியாகி ஆக்சன் படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லீடர் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 29ம் தேதி வெளியாகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கர. போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வசூலை தரவில்லை.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் கேஎஸ் ரவிக்குமார் சுராஜ் வெஞ்சரமுடு மமிதா பைஜூ ஜெயராம் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். திருட்டில் ஈடுபடும் ஹீரோ அதை விட்டுவிட்டு நேர்மையாக வாழ ஆசைப்படும் போது தந்தையின் விவசாய நிலத்தை மீட்க போராடுவதுதான் படத்தின் மையக் கதை.
கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் கர படம் ரிலீஸானது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை 28ம் தேதி கர படம் ரிலீஸாகிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கர படத்தை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.





