சமீபத்தில்தான் அந்த ஆச்சரியமான விஷயம் பலருக்கும் தெரிய வந்தது. நடிகர் சியான் விக்மும், நடிகர் பிரசாந்தும் அத்தை மகன், மாமன் மகன் என்ற நெருங்கிய உறவினர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனின் சொந்த அக்காவின் மகன்தான் சியான் விக்ரம்.
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சியான் விக்ரம் பட வாய்ப்புகளை தேடிய போது, சொந்த தாய்மாமாவான நடிகர் தியாகராஜன் உதவவில்லை. அதேபோல், சியான் விக்ரம் மாமன் மகளை திருமணம் செய்யாமல், காதல் திருமணம் செய்துகொண்டதாலும் அவர்களுக்குள் குடும்ப பகை இருந்ததாக தெரிய வருகிறது.
அதே போல் இப்போது ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. அதாவது நடிகர் சூர்யாவும், சியான் விக்ரமும் பல ஆண்டுகளாக பேசிக்கொள்வது இல்லை. அதுமட்டுமின்றி ஜோதிகா சூர்யாவின் திருமணத்துக்கு சியான் விக்ரமை அழைக்கவில்லை, அவரும் வரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த சம்பவம்தான் காரணம். அதாவது டைரக்டர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் சியான் விக்ரம், சூர்யா நடித்தனர். இருவருமே படத்தில் ஹீரோக்கள்தான். சம அந்தஸ்துள்ள நடிகர்கள் என்பதால் அதற்கேற்ப கதை, திரைக்கதை எழுதி காட்சிகளை படம் பிடித்துள்ளார் டைரக்டர் பாலா.
ஆனால் டைரக்டர் பாலாவை தனியாக சென்று சந்தித்த சியான் விக்ரம், இந்த படத்தை பொருத்தவரை நான்தானே ஹீரோ, சூர்யாவை விட சீனியர். அதனால் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அது எனக்கு தெரியும் என்று சொன்ன பாலா, இதுகுறித்து சூர்யாவிடமும் சொல்லி இருக்கிறார்.
இதனால் அப்செட் ஆன சூர்யா, அதுபற்றி விக்ரமிடம் எதுவுமே கேட்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவரிடம் பேசுவதை தவிர்த்தார், பிதாமகன் ஷூட்டிங் முடியும் வரை சியான் விக்ரமிடம், படப்பிடிப்பில் டயலாக் மட்டுமே பேசினார். இதனால் கடுப்பான சியான் விக்ரம், சூர்யா ஜோதிகா காதல் தெரிந்திருந்தது. அதனால், சூர்யாவை வெறுப்பேற்றும் விதமாக தனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் ஜோதிகா ஜோடி என்றால் இந்த படத்தில் நடிக்கிறேன் என கண்டிசன் போட்டும் இருக்கிறார். இதுபற்றி தெரிய வந்தததால் கோபமான சூர்யா, ஜோதிகா இருவருமே தங்களது திருமணத்துக்கு சியான் விக்ரமை அழைக்காமல் தவிர்த்ததாக, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





