- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படம் குறித்து வெளியான முக்கிய தகவல், அது கண்டிப்பா இல்லையாமே? -...

குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான முக்கிய தகவல், அது கண்டிப்பா இல்லையாமே? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் 3 ரோல்களில் அஜீத்குமார் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார்.

குட் பேட் அக்லி படத்தில் நடிகர்கள் பிரபு பிரசன்னா சுனில் யோகிபாபு திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் ஓஜி சம்பவம் பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 9ம் தேதி பெய்டு பிரிமியர் ஷோ நடத்த ஏற்கனவே படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. சென்னை கோவை மதுரை திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் பிரிமியர் ஷோ நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இப்போது அதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் அந்த பிரிமியர் ஷோ திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஏனெனில் பிரிமியர் ஷோ படம் பார்க்க வரும் ரசிகர்கள் படத்தின் முக்கிய காட்சிகளை எல்லாம் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பரவ விட்டால் படம் குறித்த சஸ்பென்ஸ் எல்லாம் சுக்குநூறாகி படத்தின் வெற்றியை கடுமையாக அது பாதிக்கும் என்பதால், அதை தவிர்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நடிகர் அஜீத்குமார் நடிப்பில் முன்பு வெளியான வீரம் விவேகம் விஸ்வாசம் ஆகிய படங்கள் சரியாக 10ம் தேதி ரிலீஸான நிலையில் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதனால் குட் பேட் அக்லி படம் நேரடியாக 10ம் தேதி ரிலீஸ் ஆவதே படத்துக்கு சென்டிமென்ட் ஆகவும் ஒர்க் அவுட் என்றும் படக்குழு முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியாகும் குட் பேட் அக்லி படம் சரியாக ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை தினமான அன்று படம் ரிலீஸ் ஆவதால், சிறப்பு காட்சி அனுமதி தமிழக அரசிடம் தனியாக கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இல்லை. அரசு விடுமுறை நாளில் ரிலீஸாகும் புதிய படம் என்பதால், காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு ஏற்கனவே அரசு அனுமதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்