தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜீத்குமார் நடித்த வாலி படம் தான் எஸ்ஜே சூர்யா இயக்கிய முதல் படம். வாலி படத்திலேயே எஸ்ஜே சூர்யா மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றார். இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் முதன்முறையாக வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
மேலும் இரட்டை வேடத்திலும் அஜீத்குமார் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சிம்ரன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கிய 2வது படம் குஷி. இதில் விஜய் ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர்.
குஷி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் இந்த படம் ஒரு முக்கிய படமாக தமிழ் சினிமா பயணத்தில் அவர்களுக்கு அமைந்தது. அதன் பிறகு எஸ்ஜே சூர்யா நடிகராக மாறி பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நியூ அன்பே ஆருயிரே கள்வனின் காதலி வியாபாரி திருமகன் உள்ளிட்ட பல படங்களில் எஸ்ஜே சூர்யா நாயகனாக நடித்தார்.
திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன அவர் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இறைவி என்ற படம் மூலம் எஸ்ஜே சூர்யா ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இசை மெர்சல் ஸ்பைடர் மாநாடு மார்க் ஆண்டனி ராயன் கேம் சேஞ்சர் இந்தியன் 2 என பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இப்போது மீண்டும் இயக்குனராக களத்தில் குதித்து இருக்கிறார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் இயக்குனராக களத்தில் இறங்கி இருக்கிறார். கில்லர் என்ற டைட்டிலில் எஸ்ஜே சூர்யா ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அயோத்தி படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரனி கில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
கில்லர் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து, 7ம் தேதி அதாவது இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குனர் எஸ்ஜே சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி கில்லர் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார். இந்த தகவலை எஸ்ஜே சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அன்பே ஆருயிரே படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்போது மீண்டும் எஸ்ஜே சூர்யா நடிக்கும் கில்லர் படத்துக்கு அவர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





