- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை தொடர்ந்து இயக்குனராக மாறும் பிரபல நடிகையின் மகள் -...

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயை தொடர்ந்து இயக்குனராக மாறும் பிரபல நடிகையின் மகள் – அப்பாவின் பேரை காப்பாற்றுவாரா?

- Advertisement -

நடிகர்கள் இயக்குனராக மாறுவதும் இயக்குனர்கள் நடிகர்களாக அவதாரம் எடுப்பதும் தமிழ் சினிமாவில் வழக்கமாக நடக்கிற ஒன்றுதான். இதில் இயக்குனர்கள், நடிகர்களின் வாரிசுகளும் நடிகர்களாக இயக்குனர்களாக களம் இறங்கி விடுகின்றனர். இதில் ஜெயிப்பவர்களை விட தோற்பவர்களே அதிகம் என்றாலும் சில நேரங்களில் அவர்களும் முன்னணி நட்சத்திரங்களாக வெற்றி பெறுகின்றனர்.

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் விஜயின் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக இருந்த நிலையில், மகன் விஜய் நடிகரானார்.

- Advertisement -

ஆனால் தனது அப்பா தமிழ் சினிமாவில் பெரிய ஸ்டார் நடிகராக இருந்த போதிலும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் தன் காலடியை பதித்திருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் மற்றொரு வாரிசும் இயக்குனராக விரைவில் களம் இறங்கப் போகிற தகவல் வெளியாகி உள்ளது.

அவர் பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திகா சுந்தர்தான். தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளில் நடித்த நட்சத்திர நடிகை. கடந்த பல ஆண்டுகளாக திமுக காங்கிரஸ் என கட்சிகளில் இருந்த நிலையில் இப்போது பாஜகவில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்த குஷ்புவுக்கு அனந்திகா அவந்திகா என 2 மகள்கள் உள்ளனர். இதில் அனந்திகா, சமீபத்தில் வெளியான தக்லைஃப் படத்தில் உதவி இயக்குனராக பணி செய்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னத்திடம் நேரடி பயிற்சி பெற்ற அனந்திகா விரைவில் திரைப்பட இயக்குனராக களம் இறங்க உள்ளார்.

இன்னும் சில படங்களில் உதவி இயக்குனராக அனந்திகா பணிசெய்த பிறகு, அவரை தங்களது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவும் புதுமுக இயக்குனராக அறிமுகம் செய்யவும் நடிகை குஷ்பு முடிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றவர் சுந்தர் சி. அவரது மகள் அனந்திகா இயக்குனராக, அப்பாவின் பேரை காப்பாற்றுவாரா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்