- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த பாடகி பவதாரணி இசையமைத்த கடைசி படம்; இளையராஜா இருந்த மேடையில் இப்படி ஒரு சம்பவம்...

மறைந்த பாடகி பவதாரணி இசையமைத்த கடைசி படம்; இளையராஜா இருந்த மேடையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா? – என்ன கொடும சார் இது…

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா யுவன் சங்கர் ராஜா என்ற 2 மகன்கள் உள்ளனர். அவரது மகள் பவதாரணி கடந்த ஆண்டில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நேற்று முன்தினம் 12ம் தேதி பவதாரணியின் பிறந்த நாளில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கார்த்திக் ராஜா மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டவர். இந்த விழாவில் பேசிய இளையராஜா, தனது மகள் பவதாரணியின் ஆசைப்படி சிறுமியர் இசைக்குழு ஒன்றை துவங்க இருப்பதாக இளையராஜா அறிவிப்பு செய்தார்.

- Advertisement -

மேலும், பவதாரணி இசையமைத்த புயலில் ஒரு தோணி என்ற படத்தின் இசை அறிமுக விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடந்தது. அறிமுக இயக்குனர் ஈசன் இயக்கத்தில் உருவான புதிய புதிய படம் புயலில் ஒரு தோணி. இந்த படத்தில் விஷ்ணு பிரகாஷ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அர்ச்சனா கிங் என்ற புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு இளையராஜாவின் மகள் மறைந்த பாடகி பவதாரணி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பி.ஜி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் பாடகி பவதாரணி நிறைவேந்தல் நிகழ்ச்சியில் பவதாரணி இசையமைத்த புயலில் ஒரு தோணி படத்தின் இசை தட்டை பவதாரணியின் தந்தை இசைஞானி இளையராஜா வெளியிட்டார்.

- Advertisement -

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி இசையமைத்த கடைசி படம் இது என்ற நிலையில், கடைசி நேரத்தில் இந்த இசைத்தட்டை இளையராஜா கையில் வெளியிட, ரூ. 12 லட்சம் திடீரென படக்குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. இதைக்கேட்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் படக்குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வெங்கட்பிரபு, உடனடியாக இளையராஜாவின் நேர்முக உதவியாளர் ஸ்ரீராம் என்பவரிடம் பேசி, மேடையில் இந்த இசைத்தட்டை வெளியிட ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையில் இருந்த ஏவியில் தொழில்நுட்ப பிரச்சனையால் ஒளிபரப்பு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மகள் கடைசியாக இசையமைத்த படம் என்பதால் நிச்சயமாக இளையராஜா இப்படி தொகை கேட்க வாய்ப்பே இல்லை. அவருக்கு கீழ் உள்ள ஊழியர்கள் சிலர்தான் இதுபோன்ற தவறை செய்திருக்கின்றனர் என்று சினிமா மூத்த பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி இந்த தகவலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்