- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்பு - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம், எஸ்டிஆர் 49 படம்...

நடிகர் சிம்பு – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம், எஸ்டிஆர் 49 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள படம் எஸ்டிஆர் 49. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன்தான் டைரக்ட் செய்ய இருக்கிறார். விடுதலை 2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் சிலம்பரசன் நடிக்கும் படமாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணுவிடம் ரூ. 19 கோடி வரை இயக்குனர் வெற்றிமாறன் சம்பளமாக பெற்ற நிலையில், அந்த படம் டிராப் ஆனது. அதனால் எஸ்டிஆர் 49 படத்தை தயாரிப்பாளர் தாணுவே தயாரிக்க முடிவானது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய்க்கு மேல் போனதால், தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கினார். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர் சிம்புவும் அதிக சம்பளம் கேட்டதும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் ரூ. 25 கோடி வரை சம்பளம் அதிகரித்ததாக கூறப்பட்டது.

நடிகர் சிம்பு கடைசியாக நடித்த பத்துதல மற்றும் தக்லைஃப் படமும் சரியாக போகவில்லை. அதே போல் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படமும் சரியாக போகவில்லை. அப்படிப்பட்ட சூழலில் வெற்றிமாறனும் சிம்புவும் இணையும் இந்த படத்தை ரூ. 150 கோடி வரை பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பதில் தாணுவுக்கும் விருப்பமில்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி சமீபகாலமாக பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வி படங்களாக மண்ணை கவ்வி வருகின்றன. மணிரத்னம் ஷங்கர் லோகேஷ் கனகராஜ் சிறுத்தை சிவா என எதிர்பார்க்கப்படும் பல முன்னணி நட்சத்திர இயக்குனர்களே தோல்வி படங்களை தரும் நிலையில், ரூ. 150 கோடி பட்ஜெட்டில் சிம்பு நடிக்கும் படம் மாஸ் ஹிட் படமாக அமையுமா என்ற குழப்பம் தயாரிப்பாளர் தாணுவுக்கு நீடிக்கிறது.

இந்நிலையில் தெலுங்கில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் எஸ்டிஆர் 49 படத்தை தயாரிக்க சிம்பு தரப்பில் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தாணு மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள இயக்குனர் வெற்றிமாறன், இந்த படத்தை தயாரிப்பாளர் தாணுதான் தயாரிக்க வேண்டும். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பல கோடிகளை எனக்கு சம்பளமாக தந்தவர். அதனால் வேறு நிறுவனத்தில் இந்த படத்தை இயக்க மாட்டேன். அதனால் படத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்ள இயக்குனர் வெற்றிமாறன் முன்வந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்