- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்துக்கு இப்போதே இவ்வளவு டிமாண்டா, அந்த போட்டியில் கடைசியில் இவங்க ஜெயிச்சுட்டாங்களே - விடாமுயற்சி...

விடாமுயற்சி படத்துக்கு இப்போதே இவ்வளவு டிமாண்டா, அந்த போட்டியில் கடைசியில் இவங்க ஜெயிச்சுட்டாங்களே – விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் அஜர்பைனானில் நடத்த திட்டமிடப்பட்டு, பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கடும் குளிர், மணல் புயல், பனிப்பொழிவு போன்ற காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் விடாமுயற்சி ஷூ்ட்டிங் இரண்டு முறை தடைபட்டுள்ளது. முதல்முறை சென்னை திரும்பிய அஜீத், இந்தமுறை சென்னை வராமல் துபாயில் தங்கி விட்டார்.

- Advertisement -

துபாயில் அஜீத்குமாருக்கு சொந்தமாக வீடு உள்ளது.எனவே அஜர்பைஜான் ஷூட்டிங்குக்கு நடுவே அவ்வப்போது அங்கு சென்று விடுகிறார். நாளை மறுதினம் 3ம் தேதி, அஜீத்குமார் மகளுக்கு பிறந்த நாள் என்பதால், குடும்பத்துடன் மகளின் பிறந்தநாளை துபாயில் செலிபரேட் செய்கிறார் அஜீத்குமார்.

ஜனவரி 7ம் தேதிக்கு பிறகு அஜர்பைஜானில் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர, இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அங்கு கடும் குளிர், பனிப்பொழிவு, மணல் புயல் என நீடிக்கும் பட்சத்தில் ஷூட்டிங் லோகேஷனை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

- Advertisement -

விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆங்கில புத்தாண்டு லேட்டஸ்ட் சர்ப்ரைஸ் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் குறித்த தகவலையும், அத்துடன் விடாமுயற்சி குறித்து முக்கிய அப்டேட் விவரங்களையும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் விடாமுயற்சி படத்துக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. அதாவது விடாமுயற்சி படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. ஓடிடி நெட்பிளிக்ஸ் நிறுவனம் என கைபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜீத் படத்தின் ஆடியோ, சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை முன்னணியில் உள்ள முக்கிய நிறுவனங்கள் கைப்பற்றியுளளன.

- Advertisement -

சற்று முன்