- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல், ஆனா இந்த முறை அம்மன் ...

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல், ஆனா இந்த முறை அம்மன் நயன்தாரா இல்லே – போடு வெடிய, முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஆர்ஜே பாலாஜி

- Advertisement -

நடிகர் ஆர்ஜே பாலாஜி, துவக்கத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து, பிறகு அந்த பிரபலம் மூலமாக சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர். இவரை போல மிக மிக வேகமாக பேசி, கிரிக்கெட் வர்ணனை செய்ய யாராலும் முடியாது. சலிக்காமல், ரசிக்கும்படி பேசுவதில் ஆர்ஜே பாலாஜி கில்லாடியாக இருப்பவர்.

பிரபுதேவா போன்றவர்களுடன் சில படங்களில் காமெடி நண்பராக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, எல்கேஜி படம் மூலம் இயக்குனராக மாறினார். அவரே மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கினார். இதில் நயன்தாரா நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் சாமியார் கதையை மையப்படுத்தி, அவர்கள் செய்யும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தும் ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டரில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார். அவரது அம்மாவாக ஊர்வசி நடித்திருந்தார். அஜய் ஜோஷ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் நடித்திருந்தைனர். சாமியார்கள் செய்யும் பல தகிடுதத்தங்களை இதில் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக வந்து, அவரும் நடிப்பில் அசத்தியிருந்தார்.

சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த படம் சிங்கப்பூர் சலூன். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த படத்துக்கு பிறகு மீண்டும் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார் ஆர்ஜே பாலாஜி.

இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மீண்டும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கவில்லை. இந்த முறை அந்த கேரக்டரில் நடிக்கப் போவது நடிகை திரிஷா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்போதைய தமிழ் சினிமாவில் அஜீத்குமார் விஜயை போல, நேரடியாக போட்டியாளர்களாக இருப்பவர்கள் நயன்தாராவும், திரிஷாவும்தான். இந்த மறைமுக போட்டி, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த நிலையில், 2ம் பாகத்தில் நடிகை திரிஷாவை கமிட் செய்து, 2ம் பாகம் படத்துக்கு ஆரம்பத்திலேயே ஒரு கவனத்தை ஏற்படுத்தி, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து விட்டார் டைரக்டர் ஆர்ஜே பாலாஜி.

சற்று முன்