நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ரஜினி கமல் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் கடந்த 1979ம் ஆண்டில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
ஏறக்குறைய 46 ஆண்டுகளாக ரஜினி கமல் வெள்ளித்திரையில் இணைந்து வராத நிலையில் இப்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி கமல் இருவருமே இரட்டை ஹீரோக்களாக நடிக்க தயாராகி விட்டனர். இந்த படத்தின் மற்ற அதிகாரபூர்வ தகவல்கள் அடுத்து அடுத்து வெளிவர உள்ளன.
கமல் நடித்த விக்ரம் படத்தையும் ரஜினி நடித்த கூலி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் ஒரு அற்புத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ரஜினி கமல் லோகேஷ் கனகராஜ் மூவருடைய ஒரே சாய்ஸ் அனிருத் ஆக மட்டுமே இருக்க முடியும்.
இந்த படத்தில் கதை என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி கமல் இருவருமே இந்த படத்தில் தாதாக்களாக வருகின்றனர். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் அவர்கள் ஒருகட்டத்தில் எதிரிகளாக மாறி விடுகின்றனர். கேங்ஸ்டர்களாக சண்டை போட்டுக்கொள்கின்றனர். நண்பர்களாக இருந்த அவர்கள் எதிரிகளாக மாறியது எப்படி என்பதுதான் கதை என்று சொல்கின்றனர்.
எப்படியும் லோகேஷ் கனகராஜ் தாதாக்கள் பின்னணியில்தான் கதை உருவாக்குவார். அதை விட்டால் அவருக்கு வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. கண்டிப்பாக ரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இரண்டு தாதாக்களின் சண்டை தான் கதைக்களமாக இருக்கும். நிச்சயமாக பான் இந்தியா படமாக உருவாகும் என்பதால் மற்ற மொழி ஸ்டார்களும் படத்துக்குள் வந்துவிடுவார்கள்.
மற்றொரு புதிய தகவலாக கமல் ரஜினி இணையும் இந்த படத்தில் ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா அதே போல் கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசனும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. கமல் மகள்கள் ஏற்கனவே படங்களில் நடித்தவர்கள். ரஜினியின் மகள்கள் நடிப்பார்களா என்பதுதான் சந்தேகம். இப்படி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உருட்டா உண்மையா என்பதற்கு வரும் நாட்களில் பதில் தெரிந்துவிடும்.





