நடிகர் விஜய் நடிப்பில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், கடந்த 6 மாதங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில் சினேகா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு விஜய்க்கு மீனாட்சி சௌத்ரி ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்போது திருவனந்தபுரத்தில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்த படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு மைக் மோகன் நடிக்கிறார். அதுவும் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 1990களில் மிக முக்கியமான ஹீரோவாக இருந்த பிரசாந்த், இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். லைலா, ரம்யா கிருஷ்ணன், சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், அஜ்மல் என பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.
இங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு, ரஷ்யாவில் 16 நாட்களுக்கு ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. இதற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர் (ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்) அர்ச்சனா கல்பாத்தி சில மாதங்களுக்கு முன்பே, ஏற்கனவே ரஷ்யா சென்று சில லொக்கேசன்களை பார்த்துவிட்டு வந்தார். இப்போது உதவி இயக்குனர்கள் 4 பேர் மாஸ்கோ சென்றுளள்னர்.
அவர்கள் லொகேஷன் பார்த்து, இடங்களை முடிவு செய்த பிறகு ரஷ்யாவுக்கு வெங்கட்பிரபு, விஜய் உள்ளிட்ட படப்பிடிப்புக்குழு புறப்பட்டுச் செல்கிறது. அங்கு 16 நாட்கள் ஷூட்டிங் நடக்கிறது. அதன்பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் உள்ளிட்ட படப்பிடிப்புக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து கோட் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை, இயக்குனர் வெங்கட்பிரபு கவனிக்க இருக்கிறார்.
இந்நிலையில், கோட் படத்தின் முக்கிய அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. அதாவது வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. அதாவது கோட் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படுகிறது. இதுவே விஜய் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டில் சிறப்பு கொண்டாட்டமாக அமையப் போகிறது.
அதன்பிறகு 2வது கொண்டாட்டமாக விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியன்று கோட் படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. அந்த நாளில், தனது பிறந்த நாள் பரிசாக, படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்து ஆகஸ்ட் 15ம் தேதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு உருவாக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.





