- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு... லியோ இசை வெளியீட்டு விழாவிற்கு நாள் குறிச்சாச்சாம்... யாரெல்லாம் கலந்துக்க போறாங்கன்னு தெரியுமா?...

போடு… லியோ இசை வெளியீட்டு விழாவிற்கு நாள் குறிச்சாச்சாம்… யாரெல்லாம் கலந்துக்க போறாங்கன்னு தெரியுமா?…

- Advertisement -

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லியோ படத்தின் ரிலீஸிற்க்கு மக்கள் காத்திருக்கின்றனர். விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தில், சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், திரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்தனை பேருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த அளவுக்கு காட்சிகளை ஒதுக்கி இருப்பார் என்பதை நினைக்கும் போது மலைப்பாகத்தான் இருக்கிறது. போதாக்குறைக்கு, விக்ரம் திரைப்படத்தில் அமர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசில், இதில் நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் கமல்ஹாசனுக்கும், விஜய்க்கும் நடுவில் காட்சிகள் இருக்கிறதாம். கடைசி 20 நிமிடங்களில் அனல் பறக்கச் செய்யும் விஷயங்கள் லியோவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட லோகேஷ் கனகராஜின் எல் சி யு கான்செப்ட், இதில் இருப்பதாக கூறப்படுவதால், கமல்ஹாசனும் பகத் பாசிலும் படத்தில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

காஷ்மீர், சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் லியோவின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், லியோ படத்தில் சஞ்சய்தத் மற்றும் அர்ஜூனுக்கு தான் கனமான கதாபாத்திரம் இருப்பதால், அவர்கள் தொடர்பான கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டது.

- Advertisement -

இதில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே லியோவில் இருந்து நா ரெடி தான் பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதன் பிறகு, நேரடியாக டீசரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இதனிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, அடுத்த மாதம் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மதுரை அல்லது கோவை ஆகிய நகரங்களில் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த படக்குழு, கடைசி நேரத்தில் முடிவை மாற்றி உள்ளது. இந்த விழாவில், கமல்ஹாசன் பங்கேற்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்