- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களுக்கு... இந்த முறை லியோ இசை வெளியீட்டு விழா இல்லை......

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களுக்கு… இந்த முறை லியோ இசை வெளியீட்டு விழா இல்லை… அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்; சோகத்தில் விஜய் விசிறிகள்…

- Advertisement -

இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ தான். லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், நடன இயக்குனர் சாண்டி, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கும் லலித் குமார், ஆரம்பத்தில் இருந்தே அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

காஷ்மீரில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பின் பற்றிய வீடியோ, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் கிளிம்ப்ஸ் வீடியோ, நா ரெடி தான் பாடல் உள்ளிட்டவை வெளியாகின. இதில் நா ரெடி தான் பாடலில் இருந்து சில வரிகளை தணிக்கை குழு நீக்கியது. இது குறித்து பின்னர் விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்தார்.

வரும் 19 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், லியோவிற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் தொடர்ந்து, படத்திலிருந்து நான்கு போஸ்டர்கள் வெளியாகின. அதில் விஜய்யும் சஞ்சய் தத்தும் சண்டை போடுவது போன்று புகைப்படம் இருந்தது.

- Advertisement -

இதன் மூலம் படத்தில் சஞ்சய் தத்தான் முக்கிய வில்லன் என்பதை படக்குழு சொல்லாமல் சொல்லியது. இதன் இசை வெளியீட்டு விழாவை முதலில் மலேசியாவில் நடத்த லலித் குமார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தமிழகத்தில் தான் நடத்த வேண்டும் என்று விஜய் விருப்பப்பட்டதால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திலேயே விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.

படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தலையிடுவதாகவும், இசை வெளியீட்டு விழாவை நடத்த விடாமல் மிரட்டுவதாகவும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால் இது முற்றிலும் வததி என்று லலித்குமார் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நிகழ்ச்சிக்கான பாஸ் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள தயாரிப்பு நிறுவனம், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட்டுகள் வரும் என்றும் விளக்கியுள்ளது. லியோ இசை வெளியீட்டு விழாவை பெரிதும் எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள், விஜயின் பேச்சை கேட்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்