- Advertisement -
Homeபொழுதுபோக்குமெல்ல வளரும் தலைவர் 171... லோகேஷ் கனகராஜ் 30 நாட்களுக்கு ஒரு முறை கால் செய்யும்...

மெல்ல வளரும் தலைவர் 171… லோகேஷ் கனகராஜ் 30 நாட்களுக்கு ஒரு முறை கால் செய்யும் ரஜினிகாந்த்… இதுவரை வெளிவராத விஷயங்கள்…

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் இதற்காக ஜி ஸ்குவாட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படத்தை ஆரம்ப கட்டத்தில் தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படம் ஆக பைட் கிளப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

உறியடி திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்த விஜயகுமார்தான் இந்த படத்தின் ஹீரோ. ஏற்கனவே உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்த அவர், சூரரைப் போற்று திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரிந்து இருந்தார். ஆனால் இந்த படத்தில் வேலை செய்ததற்கான பாராட்டு அவருக்கு முழுமையாக சென்று சேரவில்லை.

- Advertisement -

இதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி பைட் கிளப் படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குனர் அப்பாஸ். வட சென்னையை மையப்படுத்தி, ரத்தமும் சதையுமாக எடுத்திருக்கும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இருப்பினும் இளைஞர்கள் மத்தியில் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் 171 வது திரைப்படமாக உருவாகும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டை பயிற்சியாளர்களாக பணிபுரிகின்றனர். இந்த திரைப்படத்தின் கதையை தற்போது எழுதி வருவதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் அவர், தலைவர் 171 வது திரைப்படம் பற்றி கூறுகையில், நிச்சயமாக இந்த திரைப்படம் ஆக்சன் படமாக தான் அமையும். ஆனால் இதில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறேன். இதுவரை நான் இப்படி செய்ததில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினி சாருக்கு ஒரு மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமாக இது அமையும் என்று நம்புகிறேன். நான் கதையை எடுத்து விவரித்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். என்னை கட்டிப்பிடித்து அவர் பாராட்டினார்.

தற்போது இதற்கான திரைகதையை எழுதி வருகிறேன். இது இரண்டு மூன்று மாதங்களில் முடிவடையும். ஏப்ரல் மாதம் இதற்கான சூட்டிங்கை தொடங்க இருக்கிறோம். இந்த திரைப்படம் தொடர்பாக 30 நாட்களுக்கு ஒரு முறை ரஜினிகாந்த் எனக்கு தொலைபேசியில் அழைப்பார். படத்தில் ஏதாவது சிறிய மாற்றம் இருந்தால் அதை உடனே தொலைபேசி மூலம் தெரிந்து கொள்வார். லியோ திரைப்படம் ரிலீஸ் ஆன இந்த இடைவெளியில் 20 நிமிடங்களுக்கு ஒரு குறும்படத்தை எடுத்து உள்ளேன். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வரும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்