- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படம், எப்போது படப்பிடிப்பு? - லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர்...

சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படம், எப்போது படப்பிடிப்பு? – லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவத்தில் யாரிடமும் உதவி இயக்குனராக பயிற்சி பெறாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கி தூள் கிளப்பியிருந்தார்.

மாநகரம் படம் பார்த்த ரசிகர்கள் காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்டை பார்த்து அசந்து போயினர். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி கமல் நடிப்பில் விக்ரம் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நட்சத்திர இயக்குனராக கொண்டாட துவங்கி விட்டனர்.

பிறகு விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கிய நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் போஸ்ட் புரடக்சன் மற்றும் பிரமோ பணிகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல் நாயகனாக நடித்திருந்தார். இதில் கிளைமாக்ஸில் ரோலக்ஸ் என்ற வில்லன் கேரக்டரில் சூர்யா நடித்திருப்பார். கேமியோ ரோலில் சில நிமிடங்களே ரோலக்ஸ் கேரக்டரில் வரும் சூர்யாவின் ஆவேசமான நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதனால் ரோலக்ஸ் என்ற படம் சூர்யா நடிப்பில் எனது இயக்கத்தில் உருவாகும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படம் நேற்று வெளியானது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நேற்று சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ரோலக்ஸ் படம் எப்போது வரும் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. என்னுடைய கமிட்மெண்ட் இருக்கிறது. சூர்யாவோட கமிட்மெண்ட் இருக்கிறது. அடுத்து உடனடியாக கைதி 2 படம் இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக ரோலக்ஸ் படம் பண்ணித்தான் ஆகணும் என்று அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் கைதி 2 படத்துக்கு பின் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சற்று முன்