நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படமாக அமைந்தது விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேந்திரன், ராம்திலக், குமரவேல் இளங்கோ, சந்தானபாரதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இடைவேளைக்கு பிறகுதான் படத்தில் கமல் முழுமையாக வருகிறார் என்றாலும், கமல்ஹாசனின் ஆக்ரோஷமான நடிப்பு இந்த படத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு பிறகு கமல் இதுதான் தனது அறுவடை காலம் என்பதை புரிந்துக்கொண்டு தனது சம்பளத்தை ரூ. 150 கோடியாக உயர்த்தி விட்டார்.
தனக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த லோகேஷ் கனகராஜூக்கு மிகப்பெரிய காரை பரிசளித்தவர் கமல்ஹாசன். இந்த விக்ரம் படத்தில் நடித்த மாயா, இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார். இந்த மாயாவுக்கு துவக்கத்தில் இருந்தே கமல்ஹாசன் ஆதரவு தந்து வருகிறார். அவரை மட்டுமே பேச அனுமதிக்கிறார் என்பது கமல் மீதான விமர்சனமாக உள்ளது.
இதற்கிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர் சரவணன் விக்ரம், ஓட்டுகள் குறைவாக பெற்றதாக கூறி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது கமலிடம் பேசிய அவர், உத்தமவில்லன் படத்தில் வரும் அப்பா, மகன் உறவு போல, உங்களுடன் நான் நடிக்க ஆசைப்படுகிறேன், என்று கூறியதால், மகிழ்ச்சியடைந்த கமல்ஹாசன், கண்டிப்பாக செய்யலாம் என உறுதியளித்தார்.
அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த மாயா, லோகேஷ் கனகராஜிடம் ஒரு கதை சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வா என்று கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார். அதற்கு பதில் பேசிய கமல்ஹாசன், மாயா உங்கள் கதை மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் விருப்பத்தின்படி அதை லோகேஷ் கனகராஜ் ஒரு நல்ல படமாக உருவாக்கித் தருவார். அவரை போலவே அவரை சுற்றியிருக்கும் நண்பர்களும் மிக திறமைசாலிகள் என்று குறிப்பிட்டு பேசினார்.
இப்போது இயக்குநராக மட்டுமின்றி ஜி ஸ்குவார்டு என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய லோகேஷ் கனகராஜ், பைட் கிளப் என்ற முதல் படத்தை தயாரித்துள்ளார். அதனால் மாயா எழுதிய கதையை மாயா டைரக்ட் செய்ய லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போகிறாரா, அல்லது அந்த கதையை வேறு ஒரு டைரக்டர் டைரக்ட் செய்ய லோகேஷ் கனகராஜ் நிறுவனம் தயாரிக்க போகிறாரா என்பதற்கான விடை, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் தெரிய வரும்.





