சிறிய பட்ஜெட் படம் என்றாலும் கதை உயிரோட்டம் உள்ள காவியத்திற்கு வரவேற்பு கொடுப்பதை தமிழ் ரசிகர்கள் என்றும் தவறவிடுவதில்லை. காலம் தொட்டு இது சென்று கொண்டிருக்க தற்போது அந்த இடத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது லப்பர் பந்து திரைப்படம்.
வழக்கம்போல சாதாரண கிரிக்கெட்டை மையப்படுத்திய கதை தான் என்றாலும் அதில் தனக்கே உண்டான நேர்த்தியான விஷயங்களால் மிகவும் மாறுபட்டு இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து.
அனைவருக்கும் பிடிக்கும் கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்து, அதில் காதல், குடும்ப உறவு, சாதிப் பிரச்சனை என அனைத்தையும் சரியான விகிதத்தில் கூறி ஒரு சூப்பரான என்டர்டைன்மென்ட் படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக அவர் சாதி பிரச்சனையை படத்தில் கையாண்டிருக்கும் விதம் பலருக்கும் பிடித்துப் போய் உள்ளது.
சாதிப் பிரச்சனை என்கிற பெயரில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு வகுப்பெடுக்காமல், அதில் இருக்கும் சிக்கல்களை உளவியல் பூர்வமாக விளக்கி தமிழரசன் பச்சை முத்து சபாஷ் போட வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய்காந்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை லப்பர் பந்து திரைப்படத்தை பார்த்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
படத்தின் முதல் காட்சியிலிருந்து முடியும் வரை விஜயகாந்தின் பிரதிபலிப்பு ஒவ்வொரு சீன்களிலும் இடம் பெற்று இருக்கிறது. அதிலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக இருப்பதால் திரையரங்குகளில் விசில் சத்தம் பறக்கிறது. ஒரு நல்ல கதை அம்சமுள்ள திரைப்படத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
திரையரங்குகளில் லப்பர் பந்து வசூல்மழை குவித்துக் கொண்டு இருக்க, தற்போது அந்த இயக்குனரின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. தமிழரசன் பச்சை முத்துவை தங்களது தயாரிப்பின் கீழ் நடிக்க வைக்க பலரும் போட்டி போட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் dawn பிக்சர்ஸ் தமிழரசன் பச்சை முத்துவை புக் செய்திருக்கிறது. இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். அவரது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





